2024 டி20 உ.கோ இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் வேண்டாம்.. அந்த 2 கீப்பர்ஸ் இருக்காங்க.. இர்பான் பதான்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பை வெல்வதற்காக அனைத்து அணிகளும் போட்டியிட்டு வருகின்றன. இந்த தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. எனவே இந்த ஐபிஎல் தொடரில் அசத்தும் வீரர்கள் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் டி20 உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா போன்ற வீரர்களிடையே போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல காயத்திலிருந்து குணமடைந்து சென்னைக்கு எதிரான போட்டியில் 51 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட் டெல்லி முதல் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி ஃபார்முக்கு வந்துள்ளார்.

- Advertisement -

விக்கெட் கீப்பர்:
எனவே அவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் ஜிதேஷ் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோர் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவதற்கு தகுதியானவர்கள் என்று இர்பான் பதான் கூறியுள்ளார். மேலும் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் பட்சத்தில் உலகக் கோப்பையில் தேர்வாவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் டாப் ஆர்டரில் விளையாடுவதன் காரணமாக சஞ்சு சாம்சனை உலகக் கோப்பை அணியில் கழற்றி விடுவேன் என்று வெளிப்படையாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இதுவரை ஜிதேஷ் சர்மா இந்தியாவின் கீப்பராக செயல்பட்டு வந்தார். ஆனால் தற்போது பண்ட் வந்துள்ளார். ரிஷப் பண்ட் எந்த சூழ்நிலையிலும் வெற்றியை திருப்பக்கூடிய மேட்ச் வின்னர்”

- Advertisement -

“ஆனால் அவர் காயத்திலிருந்து நீண்ட காலம் கழித்து விளையாடுகிறார். அதனால் அவர் எந்தளவுக்கு ஃபிட்டாக இருக்கிறார்? ஃபார்முக்கு வந்து விட்டாரா? என்பதை நீங்கள் முதலில் பார்க்க வேண்டும். இருப்பினும் அவர் மீது இந்த அழுத்தங்களை போட்டு ஃபார்முக்கு வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஏனெனில் தற்போது கம்பேக் கொடுத்துள்ள அவரை முதலில் மகிழ்ச்சியாக விளையாட விட வேண்டும். அதனாலேயே அவருடைய பெயர் அங்கே இருக்கிறது. ஆனாலும் உறுதியாக கருத்தவில்லை”

இதையும் படிங்க: இனிமே தோனி 8 ஆவது இடத்தில் களமிறங்க மாட்டார்.. அவரோட ஆர்டர் மாறும் – அம்பத்தி ராயுடு அளித்துள்ள பேட்டி

“அதே போல மிடில் ஆர்டரில் விளையாடி நல்ல ஃபார்மை வைத்திருந்தால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை கேஎல் ராகுலை தவிர சிறந்த வீரரை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. துரதிஷ்டவசமாக ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்யும் இடத்திற்காக அவரை நான் தேர்வு செய்யவில்லை. ஏனெனில் அவர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். மறுபுறம் இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், கில், விராட் கோலி ஆகியோர் கண்டிப்பாக டாப் ஆர்டரில் விளையாடுவார்கள். எனவே சஞ்சு சாம்சன் உலகக் கோப்பை அணியில் பொருந்த மாட்டார்” என்று கூறினார்.

Advertisement