இனிமே தோனி 8 ஆவது இடத்தில் களமிறங்க மாட்டார்.. அவரோட ஆர்டர் மாறும் – அம்பத்தி ராயுடு அளித்துள்ள பேட்டி

Rayudu
- Advertisement -

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியானது 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பாக வார்னர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.

பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது இறுதிவரை போராடியும் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே குவித்ததால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சி.எஸ்.கே அணி தோல்வியை தழுவியது.

- Advertisement -

இருப்பினும் இந்த போட்டியில் எட்டாவது வீரராக களமிறங்கிய தோனி 16 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 37 ரன்கள் குவித்து அதிரடி காட்டியது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இந்தப் போட்டியின் முடிவுக்கு பின்னர் பேசிய சென்னை அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு கூறுகையில் :

தோனி இந்த ஆட்டத்தில் தோல்வி உறுதி என்று தெரிந்த பின்னர் தான் களமிறங்கியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : தோனியின் இந்த ஆட்டத்திற்கு பிறகு எனக்கு சில விஷயங்கள் தோன்றுகிறது. இனிமேல் தோனி நம்பர் 8-ல் களமிறங்க மாட்டார் என்று தோன்றுகிறது. நிச்சயம் அவர் இனி நம்பர் 6-ல் தான் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

ஏனெனில் நேற்றைய போட்டியின் போது அவர் களமிறங்கும் போது ஆட்டம் கைமீறி போய்விட்டது என்பது நிச்சயம் அவருக்கு புரிந்திருக்கும். அதனால் தோனி இந்த போட்டியை பயிற்சி களமாகவே பார்த்திருப்பார். இதேபோன்ற சூழ்நிலை பிளேஆப் சுற்றுகளில் வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று அவருக்கு நன்றாக தெரியும். எனவே இனிவரும் போட்டிகளில் தன்னை தயார்படுத்திக் கொள்வதாக கொள்வதற்காகவே இந்த போட்டியில் அவர் இப்படி விளையாடி இருப்பார்.

இதையும் படிங்க: விண்டேஜ் தோனி.. 42 வயசு தான் ஆகுதா? வர்ணிக்க வார்த்தையில்ல.. கண்டிப்பா அதை செய்வாரு.. ஸ்ரீகாந்த் பாராட்டு

நிச்சயம் சிறந்த பவுலர்களுக்கு எதிராக கடினமான பந்துகளை எதிர்கொண்டு ரன்களை சேர்க்க முடிகிறதா என்பதை அவர் இந்த போட்டியின் மூலம் சோதித்து இருப்பார். எனவே இனிவரும் போட்டிகளில் அவர் முன்கூட்டியே களமிறங்குவார். இந்த ஆட்டத்தின் மூலம் கடைசி ஐந்து ஓவர்களில் தோனி வருவார் என்கிற அச்சம் அனைவருக்கும் எழுந்திருக்கும். 2005-இல் பார்த்த தோனியை மீண்டும் பார்க்க போகிறோம் என மற்ற அணிகள் நினைப்பார்கள் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement