ஹிஸ்டரில உங்க பெயர் டாப்ல இருக்க.. அதை மட்டும் செய்ங்க.. ரோஹித்துக்கு இர்பான் பதான் முக்கிய ஆலோசனை

Irfan Pathan 55
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவுக்கு பறந்துள்ள இந்திய அணி அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாடுவதற்காக களமிறங்கியுள்ளது.

அதில் கடைசியாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட தொடரை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதே இந்திய அணியின் மிகப்பெரிய லட்சியமாக இருக்கும் என்றே சொல்லலாம். ஏனெனில் 20ஆம் நூற்றாண்டிலேயே சவாலான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து மண்ணில் குறைந்தபட்சம் ஒரு டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றி வாகை சூடியது.

- Advertisement -

சரித்திரம் படைங்க ரோஹித்:
ஆனால் வேகத்துக்கு சாதகமான மைதானங்களை கொண்ட தென்னாப்பிரிக்காவில் மட்டும் 1992 முதல் இதுவரை சச்சின் முதல் ஜஹீர் கான் வரை எத்தனையோ ஜாம்பவான் வீரர்கள் விளையாடியும் இந்தியாவால் வெற்றி காண முடியவில்லை. குறிப்பாக 2010இல் தோனி தலைமையில் 1 – 1 என்ற கணக்கில் போராடி தொடரை சமன் செய்த இந்தியா கடைசியாக 2021/22இல் விராட் கோலி தலைமையில் 2 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

எனவே இம்முறை வென்றால் இந்திய வரலாற்றின் மகத்தான கேப்டன்களின் பட்டியலில் டாப் இடத்தில் உங்களுடைய பெயர் பொறிக்கப்படும் என்று ரோகித் சர்மாவுக்கு முன்னாள் இர்பான் பதான் ஊக்கத்தை கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு துவக்க வீரரான ரோஹித் சர்மா பந்தின் பளபளப்பு தன்மையை ஆரம்பத்திலேயே அதிரடியாக எதிர்கொண்டு நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தென்னாப்பிரிக்க தொடரை வெல்லும் பட்சத்தில் ரோஹித் சர்மாவின் பெயர் இந்திய கிரிக்கெட்டின் கேப்டன்களின் பட்டியலில் டாப் இடத்தை பிடிக்கும். அவர் இந்த 2 போட்டிகளையும் வெல்வதற்கான சாவியாக இருப்பார். கேப்டன் மற்றும் துவக்க வீரராக இருக்கும் நீங்கள் மற்ற பேட்ஸ்மேன்கள் ஜொலிப்பதற்கான வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். அதற்கு ஆரம்பத்திலேயே புதிய பந்தின் பளபளப்பு தன்மையை நீங்கள் நீக்க வேண்டும்”

இதையும் படிங்க: 4 ஸ்பெஷல் ஸ்பின்னர்ஸ்.. இந்தியாவை சாய்க்க ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடி அணியை அறிவித்த இங்கிலாந்து

“இங்கிலாந்துக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு ரோகித் சர்மா சிறப்பாக தயாராகி சென்றார். அதே போலவே இத்தொடரில் புதிய பந்தை எதிர்கொண்டு அணியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு அவர் சிறப்பாக தயாராவார் என்று நம்புகிறேன். நம்மிடம் ரோகித் சர்மா – விராட் கோலி ஆகிய 2 பெரிய சகோதரர்கள் இருக்கின்றனர். அவர்களைச் சார்ந்தே இந்தியாவின் வெற்றி இருக்கும்” என்று கூறினார்.

Advertisement