இந்த உலககோப்பை யாருக்கு சாதகம்? ஜெயிக்கப்போவது யார்? – இர்பான் பதான் மற்றும் கவாஸ்கர் கருத்து

Gavaskar-and-Pathan
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐசிசி-யின் 13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்க உள்ளது. இந்த மாபெரும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த துவக்க போட்டிக்கான ஏற்பாடுகளும் பிரபண்டமான முறையில் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் முற்றிலுமாக நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணி தங்களது முதலாவது போட்டியில் அக்டோபர் 8-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்த்து விளையாடி இருக்கிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற சாதகம் உள்ள அணிகள் எது? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான இர்பான் பதான் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோரும் இந்த தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சுனில் கவாஸ்கர் கூறுகையில் : நடப்பு சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்து அணியே இந்த தொடரையும் கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அந்த அணியில் உள்ள பேட்டிங் மற்றும் பவுலிங் பலம் ஆகியவற்றை தவிர்த்து உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர்களும் அந்த அணியில் உள்ளனர்.

- Advertisement -

இதுபோன்ற ஒருநாள் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்கள் மிகவும் முக்கியம். அதோடு பவுலிங் வரிசையிலும் நல்ல அனுபவம் உள்ள வீரர்கள் உள்ளன. எனவே இங்கிலாந்து அணி இந்த தொடரில் அதிக சாதகத்தை பெறுவார்கள் என்று கூறியிருந்தார். அதேபோன்று இர்பான் பதான் பேசுகையில் : இந்திய அணி இந்த தொடரில் மிகப்பெரிய சாதகத்தை பெறுவார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி மிக பலம் வாய்ந்த அணியினர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.

இதையும் படிங்க : அவர மாதிரி ஸ்மார்ட்டான பிளேயர்.. கண்டிப்பா ஆஸி போட்டிக்கான இந்திய லெவனில் இருக்கணும்.. பியூஸ் சாவ்லா ஆதரவு

அதோடு அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசியக்கோப்பை தொடர் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் என இரண்டிலுமே அசத்தியுள்ளது. தற்போதுள்ள இந்திய அணியில் முகமது ஷமிக்கே பிளேயிங் லெவனில் வாய்ப்பு இல்லை என்றால் அந்த அளவிற்கு உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை இந்திய அணி தங்கள் வசம் வைத்துள்ளது. எனவே இந்த தொடரில் இந்தியா தான் சாதகமான அணி என்று இர்பான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement