IPL 2023 : இன்றைய இந்த நாளை உங்க வாழ்க்கையில மறந்துடுங்க. அதுதான் நல்லது – இளம்வீரருக்கு இர்பான் பதான் அட்வைஸ்

pathan 1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் போட்டி நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதல் பந்து முதல் கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணியானது மூன்று விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி கடைசி பந்தில் திரில் வெற்றியை பெற்று இருந்தது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியானது தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை குவித்தது. பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 7 விக்கெட்டை இழந்து 207 ரன்கள் குவித்து மூன்று விக்கெட் வித்யாசத்தில் பிரமாதமான வெற்றியை பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் கடைசி ஆறு பந்துகளுக்கு 29 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஐந்து பந்துகளிலும் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்களை விளாசிய கொல்கத்தா அணியின் இளம் வீரரான ரிங்கு சிங் அந்த அணியின் பிரமாதமான வெற்றிக்கு வித்திட்டார். மொத்தம் 21 பந்துகளை சந்தித்த அவர் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 48 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அதேபோன்று ரிங்கு சிங்குக்கு எதிராக கடைசி ஓவரை வீசிய யாஷ் தயாள் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை விட்டுக் கொடுத்தது மட்டுமின்றி அந்த ஓவரில் 31 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதற்கு முன்னதாக அவர் மூன்று ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்ததால் மொத்தமாக 4 ஓவர்கள் 69 ரன்களை வாரிவழங்கியுள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த இரண்டாவது மோசமான பவுலர் என்ற மோசமான சாதனை பட்டியலில் அவர் இணைந்துள்ளார். நேற்றைய போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு மைதானத்திற்கு கண்ணீர் விட்ட அவருக்கு தற்போது பல்வேறு தரப்பினும் இருந்தும் ஆறுதல்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் ஒரு அட்வைஸ் வழங்கியுள்ளார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிட்டதாவது :

இதையும் படிங்க : IPL 2023 : அந்த 2 ஹிட்டர்ஸ் இருக்காங்க, 3 மேட்ச் ஆச்சு இனிமேலாவது தடவாம அடிங்க – கேஎல் ராகுலுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்

யாஷ் தயாள் நண்பா அடுத்த ஆட்டத்திற்கு செல்லும் போது நல்ல நாட்களை மறந்து நாம் அடுத்த போட்டிகளில் பங்கேற்பது போல இன்றைய ஆட்டத்தில் நடந்த கெட்டதை மறந்து விடுங்கள். நிச்சயம் நீங்கள் வலுவாக இருந்தால் எல்லா விஷயங்களையும் உங்களால் மாற்ற முடியும் என அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement