IPL 2023 : அந்த 2 ஹிட்டர்ஸ் இருக்காங்க, 3 மேட்ச் ஆச்சு இனிமேலாவது தடவாம அடிங்க – கேஎல் ராகுலுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் தங்களது முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றி 1 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறும் தன்னுடைய 4வது போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்ளும் அந்த அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

KL-Rahul

- Advertisement -

ஏனெனில் ஆரம்ப காலங்களில் தடுமாறிய அவர் 2019 முதல் ஐபிஎல் தொடரில் அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து இந்திய அணியிலும் நிலையான ஓப்பனிங் இடத்தை பிடித்தார். அதனால் அவருடைய ஐபிஎல் மார்க்கெட் 17 கோடி என்ற உச்சத்தை தொட்டதால் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த சில சீசன்களாக 500+ ரன்களை குவித்தும் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுக்க தவறியது அவருடைய அணிக்கு எந்த பயனும் ஏற்படுத்தவில்லை.

சாஸ்திரி கோரிக்கை:
அதன் காரணமாக ஆரஞ்சு தொப்பிக்காக சுயநலத்துடன் விளையாடுவதாக நிறைய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்த ராகுல் 2022 ஐபிஎல் தொடருக்கு பின் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த பின் ஃபார்மை இழந்து ரொம்பவே தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்ததால் ஓப்பனிங் இடத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு மிடில் ஆர்டரில் மட்டும் விளையாடி வருகிறார்.

Shastri

எனவே இந்திய அணியில் மீண்டும் நிலையான இடத்தைப் பிடிக்க இத்தொடரில் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள அவர் 8 (12), 20 (18), 35 (31) என குறைவான ரன்களை குறைவான ஸ்டிரைக் ரேட்டில் மட்டுமே எடுத்து வருகிறார். இந்நிலையில் முதல் 3 போட்டிகளில் விளையாடாத தென்னாப்பிரிக்க வீரர் குவின்டன் டீ காக் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியில் இணைந்துள்ளார். அதே போல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயில் மேர்யஸ் இந்த சீசனில் அதிரடியாக விளையாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

- Advertisement -

அப்படி 2 அதிரடி வீரர்கள் இருப்பதால் உங்களது விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் அடுத்து வரும் போட்டிகளில் பெரிய ரன்களை வேகமான ஸ்ட்ரைக் ரேட்டில் குவிக்குமாறு கேஎல் ராகுலை முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இனிமேல் கேஎல் ராகுல் பெரிய ரன்களை அதிரடியான வேகத்தில் எடுக்க வேண்டிய இலக்குடன் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பாக கெயில் மேயர்ஸ், குயின்டன் டீ காக், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் இருப்பது லக்னோ அணியின் பேட்டிங் வரிசையை மிகவும் தவறாக மாற்றியுள்ளது. எனவே இனிமேல் கேஎல் ராகுல் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

Kyle-Mayers

அவர் கூறுவது போல 3 போட்டிகளில் விளையாடி சூழ்நிலைகளைப் பற்றி தெரிந்து கொண்ட ராகுல் இனியாவது அதிரடியாக விளையாடினால் தான் கடைசி கட்ட போட்டிகளுக்கு முன் ஃபார்முக்கு திரும்பி இம்முறையாவது லக்னோவுக்கு முதல் கோப்பையை வென்று கொடுக்க முடியும். அதே போல ஐபிஎல் வரலாற்றில் தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்த முதல் வீரராக சாதனை படைத்த கெய்ல் மேயர்ஸ் பற்றி ரவி சாஸ்திரி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: வீடியோ : என்னோட 43 வருட கிரிக்கெட் கேரியர்ல அந்த 2 பேருக்கு அப்றம் நீங்க இப்டி சிக்ஸர் அடிச்சிருக்கீங்க – ரிங்குவுக்கு ஜாம்பவான் கோச் பாராட்டு

“அவருடைய பேட்டிங்கை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் பார்த்தேன். அவர் அடித்து நொறுக்கும் வீரராக தன்னை அடையாளப்படுத்துகிறார். அவருக்கு மட்டும் முதல் 5 – 6 ஓவர்களில் பேட்டிங்கு சாதகமான சூழ்நிலை கிடைக்கும் பட்சத்தில் அதில் அதிரடியாக விளையாடி வெற்றிக்கான நல்ல அடித்தளத்தை ஆரம்பத்திலேயே உங்களுக்கு அமைத்துக் கொடுத்து விடுவார்” என்று கூறினார்.

Advertisement