வீடியோ : என்னோட 43 வருட கிரிக்கெட் கேரியர்ல அந்த 2 பேருக்கு அப்றம் நீங்க இப்டி சிக்ஸர் அடிச்சிருக்கீங்க – ரிங்குவுக்கு ஜாம்பவான் கோச் பாராட்டு

Rinku SIngh Chandrakand pandit
- Advertisement -

இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்ற 13 வது லீக் போட்டியில் அனல் பறந்த ஆட்டத்தில் ரிங்கு சிங் ஒட்டுமொத்த உலகத்தை திரும்பி பார்க்கும் வகையில் அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார் என்றே சொல்லலாம். அகமதாபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் 204/4 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தமிழக வீரர்கள் விஜய் சங்கர் அதிரடியாக 63* (24) ரன்களும் சாய் சுதர்சன் 53 (38) ரன்களும் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக சுனில் நரேன் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து 205 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் 15, ஜெகதீசன் 6 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் 3வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் நிதீஷ் ராணா 45 (29) ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 83 (40) ரன்களும் அடித்து வெற்றி உறுதி செய்த ஆட்டமிழந்தனர். ஆனால் அப்போது ஆண்ட்ரே ரசல் 1, சுனில் நரேன் 0, தாகூர் 0 என அடுத்தடுத்த 3 விக்கெட்டுகளை சாய்த்து ஹாட்ரிக் எடுத்த ரசித் கான் திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

43 வருடத்தில்:
அதனால் கேள்விக்குறியான கொல்கத்தாவின் வெற்றியை 19வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு நெருங்கிய ரிங்கு சிங் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் கடைசி 5 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த 5 சிக்சர்களை தெறிக்கவிட்டு 48* (21) ரன்கள் விளாசி நம்ப முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதற்கு முன் ஒட்டுமொத்த உலக டி20 கிரிக்கெட்டில் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை அடித்து 30 ரன்கள் விளாசி எந்த பேட்ஸ்மேனும் வெற்றிகரமாக சேசிங் செய்யாத அசாத்தியமான வெற்றியை பெற்றுக்கொடுத்து உலக சாதனை படைத்த ரிங்கு சிங் சமூக வலைதளங்களில் அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறார்.

அந்த வரிசையில் தன்னுடைய 43 வருட கேரியரில் ரஞ்சி கோப்பையில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்த ரவி சாஸ்திரி மற்றும் 1986 ஆஸ்ட்ரல்-ஆசிய கோப்பை ஃபைனலில் இந்தியாவின் சேட்டன் சர்மாவுக்கு எதிராக கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்த பாகிஸ்தானின் ஜாவேத் மியாண்டட் ஆகியோரது வரிசையில் உங்களைப் பார்ப்பதாக ரிங்கு சிங்கை கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் பாராட்டியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரான அவர் பயிற்சியாளராக நிறைய ரஞ்சிக் கோப்பைகளை வென்று இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் மகத்தான பயிற்சியாளராக போற்றப்படுகிறார்.

- Advertisement -

அப்படிப்பட்ட அவர் போட்டியின் முடிவில் நேரடியாக ரிங்குவை பாராட்டியது பின்வருமாறு. “உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் விளையாடி பயிற்சியாளராக செயல்பட்டு வரும் என்னுடைய 43 வருட கிரிக்கெட் கேரியரில் இதற்கு முன் இது போல 2 இன்னிங்ஸ்கலை மட்டுமே பார்த்துள்ளேன். ஒன்று ரஞ்சிக் கோப்பையில் ரவி சாஸ்திரி 6 சிக்ஸர்கள் அடித்தது. 2வது துபாயில் ஜாவேத் மியாண்டட் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தது. அதற்குப் பின் உன்னை தான் பார்க்கிறேன் ரிங்கு” என்று பாராட்டினார்.

முன்னதாக கடந்த வருடமே லக்னோவுக்கு எதிராக 211 ரன்களை துரத்தும் போது 40 (15) ரன்கள் விளாசி வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்த ரிங்கு சிங் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்ததால் 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்றது. ஆனால் அன்று விட்ட வெற்றியை இன்று நீங்கள் உறுதி செய்துள்ளதாக கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா அவரை பாராட்டியது பின்வருமாறு.

இதையும் படிங்க:IPL 2023 : பிரெண்டன் மெக்கலத்துக்கு அடுத்து ஐ.பி.எல் போட்டியில் சாதனை நிகழ்த்திய – ஷிகார் தவான்

“ரிங்கு கடந்த வருடம் போராடியும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் இம்முறை 2வது சிக்சர் அடித்ததும் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஏனெனில் யாஷ் தயாள் தன்னுடைய திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியாமல் தவித்தார். உண்மையாக 100க்கு 1 போட்டியில் மட்டுமே இது போன்ற வெற்றி கிடைக்கும்” என்று பாராட்டினார்.

Advertisement