IPL 2023 : பிரெண்டன் மெக்கலத்துக்கு அடுத்து ஐ.பி.எல் போட்டியில் சாதனை நிகழ்த்திய – ஷிகார் தவான்

Dhawan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியானது நேற்று இரவு ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்து வீசம் என்று அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை குவித்தது.

Dhawan 1

- Advertisement -

பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணியானது 17.1 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 145 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி சார்பாக கேப்டன் ஷிகர் தவான் மட்டும் 66 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 99 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஒரு கட்டத்தில் 88 ரன்களுக்கு எல்லாம் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தத்தளித்தது.

Dhawan 2

அப்போது நிச்சயம் பஞ்சாப் அணி 100 ரன்களை கூட தொடாது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 99 ரன்களை அடித்த தவான் தனி ஒருவனாக அந்த அணியை ஒரு டீசன்டான ரன் குவிப்புக்கு (143 ரன்கள்) அழைத்துச் சென்றார். ஷிகார் தவான் அடித்த இந்த 99 ரன்கள் மூலம் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மெக்கல்லத்துக்கு அடுத்ததாக ஒரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக கொல்கத்தா அணி 222 ரன்கள் அடித்தது. அந்த போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக பிரெண்டன் மெக்கல்லம் மட்டும் 158 ரன்கள் அடித்தார். அதாவது ஒரு அணி அடித்த ரன்களில் 71.17 சதவீத ரன்களை தனி ஒருவராக மெக்கல்லம் மட்டும் தனியாக அடித்து இருந்தார்.

இதையும் படிங்க : வீடியோ : ஹீரோவாக மாறிய ரிங்கு சிங்கை பாராட்ட மனமில்லாமல் பேசிய ரோஹன் கவாஸ்கர் – விளாசும் ரசிகர்கள், நடந்தது என்ன

அதனை தொடர்ந்து நேற்று பஞ்சாப் அணி அடித்த 143 ரன்களில் ஷிகார் தவான் மட்டும் 99 ரன்கள் அதாவது (69.23) சதவீத ரன்களை தனியாக அடித்து ஒரே போட்டியில் அதிக சதவீத ரன்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை தவான் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement