ஹீரோவாக மாறிய ரிங்கு சிங்கை பாராட்ட மனமில்லாமல் பேசிய ரோஹன் கவாஸ்கர் – விளாசும் ரசிகர்கள், நடந்தது என்ன

Rinku SIngh Rohan Gavaskar
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 9ஆம் தேதியன்று நடைபெற்ற 13வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்துக்கு எதிராக நம்ப முடியாத இன்னிங்ஸ் விளையாடிய ரிங்கு சிங் வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 204/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர்கள் விஜய் சங்கர் அதிரடியாக 63* (24) ரன்களும் சாய் சுதர்சன் 53 (37) ரன்களும் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக சுனில் நரேன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 205 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு ரகமதுல்லா குர்பாஸ் 15, ஜெகதீசன் 6 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் 3வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் நிதிஷ் ராணா 45 (29) ரன்களும் நீண்ட நாட்கள் கழித்து அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 8 பவுண்டரி 5 சிக்சருடன் 83 (40) ரன்களும் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார்கள். இருப்பினும் அப்போது 17வது ஓவரில் ஆண்ட்ரே ரசல் 1, சுனில் நரேன் 0, ஷார்துல் தாகூர் 0 என 3 அடுத்தடுத்த வீரர்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்த ரசித் கான் ஹாட்ரிக் எடுத்து கொல்கத்தாவின் வெற்றியை கிட்டத்தட்ட பறித்தார்.

- Advertisement -

மனமில்லாத ரோஹன்:
ஆனாலும் மனம் தளராமல் போராடிய ரிங்கு சிங் ஜோஸ்வா லிட்டில் வீசிய 19வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் சிக்சர்களை பறக்க விட்டு யாஷ் தயால் வீசிய கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த 5 சிக்ஸர்களை தெறிக்க விட்டு 48* (21) ரன்கள் விளாசி அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக உலகிலேயே இதற்கு முன் கடைசி ஓவரில் 5 தொடர்ச்சியான சிக்சர்களை அடித்து 30 ரன்களை விளாசி எந்த பேட்ஸ்மேனும் வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை.

இருப்பினும் அதை தனது தன்னம்பிக்கையால் சாத்தியப்படுத்திய அவரை கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா, பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் ஆகியோர் வின்னிங் சாட் அடித்ததும் மைதானத்திற்குள் வெறித்தனமாக ஓடி வந்து உணர்ச்சி பொங்க கட்டிப்பிடித்து பாராட்டினார்கள். ஆனால் அப்போது அதை ஆங்கிலத்தில் வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் வீரர் ரோகன் கவாஸ்கர் “30 பந்தில் 30 ரன்கள் எடுக்கும் போது பேட்ஸ்மேன்களை குறை சொல்லும் நாம் தற்போது கடைசி ஓவரில் 31 ரன்களை வாரி வழங்கிய பவுலரை விமர்சிக்காமல் ரிங்கு சிங் ஹீரோவாக செயல்பட்டதைப் போல் பாராட்டுகிறோம்” என்று பாராட்ட மனமில்லாமல் பேசினார்.

- Advertisement -

இது பற்றி நேரலையில் அவர் பேசியது பின்வருமாறு. “இதனால் தான் இது பவுலர்களின் விளையாட்டு என்று நான் சொல்வேன். இந்த இடத்தில் அவர் (யாஷ் தயால்) குப்பையை போல் பந்து வீசினார். ஆனால் அதை விட்டுவிட்டு நாம் ரிங்கு சிங் எப்படி சிறப்பாக பேட்டிங் செய்தார் என்று பாராட்டுகிறோம். அதுவே நேற்று ஒரு பேட்ஸ்மேன் எதிர்கொண்ட பந்துகளுக்கு சமமான ரன்களை மட்டும் எடுத்த போது அல்லது 120க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய போது நீங்கள் பேட்ஸ்மேனை தான் விமர்சித்தீர்கள்”

“அதே போல இங்கு ஒரு பவுலர் 31 ரன்கள் வாரி வழங்கியும் நீங்கள் ரிங்கு சிங் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டுகிறீர்கள். அதனால் தான் டி20 என்பது பவுலர்களின் விளையாட்டு என்று நான் கூறி வருகிறேன்” என தெரிவித்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த பொன்னான தருணத்தில் கிரிக்கெட்டின் அடிப்படையை தெரியாமல் இப்படி பேசிய ரோஹன் கவாஸ்கரை பதவி நீக்கம் செய்து விட்டு வேறு வர்ணனையாளரை நியமிக்குமாறு கடுமையான கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க:IPL 2023 : அன்று இந்திய அணியில் ஒரு பேச்சு, இன்று சென்னை அணியில் ஒரு பேச்சா? ரஹானே தேர்வில் தோனிக்கு சேவாக் கேள்வி

ஏனெனில் யாஷ் தயாள் சுமாராக பந்து வீசினாலும் எட்ஜ் கொடுக்காத அளவுக்கு அனைத்து பந்துகளிலும் திறமை இல்லாமல் ரிங்கு சிங் சிக்சர் அடித்திருக்க முடியாது. அதனால் உங்களது அப்பாவின் பரிந்துரையுடன் இந்திய அணிக்கு விளையாடி குறுகிய காலத்திலேயே காணாமல் போன உங்களுக்கு ஏழை குடும்பத்தில் பிறந்து போராடி இவ்வளவு மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்த இளம் வீரரை பாராட்ட மனமில்லை என்றால் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருங்கள் என்றும் ரசிகர்கள் விளாசி வருகிறார்கள்.

Advertisement