IPL 2023 : அன்று இந்திய அணியில் ஒரு பேச்சு, இன்று சென்னை அணியில் ஒரு பேச்சா? ரஹானே தேர்வில் தோனிக்கு சேவாக் கேள்வி

- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய 3வது போட்டியில் பரம எதிரியான மும்பையை அதன் சொந்த ஊரில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 2வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அந்த போட்டியில் மும்பையில் பிறந்து வளர்ந்து ஐபிஎல் தொடரில் நல்ல ரன்களை குவித்து இந்தியாவுக்காகவும் சில மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அஜிங்க்ய ரகானே முதல் முறையாக சென்னை அணிக்காக களமிறங்கினார். ஆனால் அந்த அறிமுக போட்டியிலேயே யாருமே எதிர்பாராத வகையில் 7 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு 61 (27) ரன்கள் குவித்த அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

குறிப்பாக வெறும் 19 பந்துகளில் ஐபிஎல் வரலாற்றில் மும்பைக்கு எதிராக அதிவேகமாக அரை சதமடித்த சென்னை வீரர் என்ற சாதனையும் படைத்த அவர் அனைத்து ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்து பாராட்டுகளை பெற்றார். ஏனெனில் பொதுவாகவே சற்று மெதுவாக விளையாடும் டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேனாக அறியப்படும் அவர் இந்தளவுக்கு அதிரடியாக விளையாடுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அதிரடியாகவும் அழகாகவும் விளையாடும் திறமையை கொண்டுள்ள அவர் இப்படி விளையாடியதில் யாருக்கும் ஆச்சரியமும் இல்லை.

சேவாக் கேள்வி:
முன்னதாக கடந்த 2011ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்தியாவுக்காக அறிமுகமான ரகானே 3 வகையான கிரிக்கெட்டிலும் வாய்ப்பு பெற்றார். அதில் ஆரம்பக் காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2015 உலக கோப்பையில் மிடில் ஆர்டரில் முக்கிய வீரராக விளையாடிய ரகானே நாளடைவில் ஐபிஎல் தொடரிலும் வெள்ளை பந்து கிரிக்கெட்டிலும் சற்று மெதுவாக விளையாடியதால் கழற்றி விடப்பட்டார்.

rahaney

இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிலையான இடத்தைப் பிடித்து விளையாடி வந்த அவர் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் சதமடித்து கேப்டனாக வெற்றி பெற்று கொடுத்த பின் ஃபார்மை இழந்து தடுமாறியதால் தற்போது மொத்தமாக கழற்றி விடப்பட்டுள்ளார். இந்த நிலையில் 34 வயதாகும் அவருடைய இந்திய கேரியர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு முடிந்ததாக கருதப்பட்டாலும் இதே போல் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் மீண்டும் விளையாட வாய்ப்புள்ளது. மேலும் தற்போது ரகானே ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு தோனியின் ஆதரவும் சுதந்திரமும் தான் காரணம் என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -

சொல்லப்போனால் அவரே போட்டியின் முடிவில் அப்படி தான் தெரிவித்தார். இந்நிலையில் இந்திய அணியில் ரகானே மெதுவாக விளையாடியதாக கூறி கழற்றி விட்ட தோனி இப்போது மட்டும் சென்னை அணியில் அனுபவத்திற்காக வாய்ப்பு கொடுப்பது ஏன் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கேள்வி அனுப்பியுள்ளார். அதாவது அப்போது ஒருவகையான அணுகுமுறை மற்றும் கருத்தை தெரிவித்த தோனி இப்போது வேறு அணுகுமுறையையும் கருத்தையும் பின்பற்றுவதாக தெரிவிக்கும் சேவாக் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

Sehwag

“ஐபிஎல் தொடரில் தன்னுடைய அணியில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு ரகானேவிடம் தோனி அப்படி என்ன பார்த்தார்? எப்போதுமே வீரர்களுக்கு நம்பிக்கை அவசியமாகும். ஆனால் இந்த இடத்தில் கேப்டன் தோனியிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதாவது தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது ஒருநாள் அணியில் ரகானேவை வைத்திருக்கவில்லை. குறிப்பாக ரகானே மெதுவாக விளையாடுகிறார் அவரால் ஸ்ட்ரைக்கை மாற்ற முடியவில்லை என்ற காரணத்துடன் தோனி கழற்றி விட்டார். ஆனால் தற்போது சென்னை அணியில் திடீரென்று அவர் அனுபவத்தை விரும்புவதால் ரகானேவை கொண்டு வந்துள்ளார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : யார் இந்த ரிங்கு சிங்? சுரேஷ் ரெய்னா அவருக்கு செய்த உதவி – கொல்கத்தா அணி அவரை தேர்வு செய்தது எப்படி?

ரகானே மட்டுமல்லாமல் 2011 உலக கோப்பைக்கு பின் வருங்காலத்தை கட்டமைப்பதற்காக சேவாக், கம்பீர், ஹர்பஜன், உள்ளிட்ட சீனியர்களை மெதுவாக செயல்படுவதாக கூறி தைரியமாக கழற்றி விட்ட தோனி விமர்சனங்களை தாண்டி ரோகித், ஜடேஜா, தவான் போன்ற அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளித்தார். அதே போல ரகானேவையும் கழற்றி விட்ட அவர் இப்போது மட்டும் சென்னை அணியில் வாய்ப்பு கொடுப்பது ஏன் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

Advertisement