IPL 2023 : யார் இந்த ரிங்கு சிங்? சுரேஷ் ரெய்னா அவருக்கு செய்த உதவி – கொல்கத்தா அணி அவரை தேர்வு செய்தது எப்படி?

Rinku-Singh
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரால் பல இளம் வீரர்களின் வாழ்க்கை அப்படியே மாறுவதோடு மட்டுமின்றி அவர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாகவும் பார்க்கப்படும் அளவிற்கு ஒரு பெரிய புகழை பெறுகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே பல இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடி உள்ளனர். அந்த வகையில் சாதாரணமாக கொல்கத்தா அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட 25 வயது இளம் வீரரான ரிங்கு சிங் தற்போது ஓவர் நைட்டில் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக மாறி உள்ளார். அந்த வகையில் நடப்பு 16-வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது கடைசி ஐந்து பந்துகளில் 28 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் இருந்த ரிங்கு சிங் 5 பந்துகளையும் தொடர்ச்சியாக சிக்சருக்கு விளாசி கொல்கத்தா அணியை நம்ப முடியாத வெற்றிக்கு அழைத்துச் சென்றது மட்டுமின்றி ஒரே நைட்டில் ஹீரோவாகவும் மாறியுள்ளார்.

- Advertisement -

முதல் 14 பந்துகளை சந்தித்து 8 ரன்களை மட்டுமே எடுத்திருந்த அவர் கடைசி ஓவரில் யாஷ் தயாளுக்கு எதிராக 5 சிக்சர்களை பறக்க விட்டதன் மூலம் தற்போது ரிங்கு சிங் யார் என்பது குறித்த தகவல்களை ரசிகர்கள் இணையதளத்தின் மூலம் தேடி வருகின்றனர். அந்த வகையில் ரிங்கு சிங் குறித்த சுவாரசிய தகவல்களை நாங்கள் உங்களுக்கு பிரத்யேகமாக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி 25 வயதான ரிங்கு சிங் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். 2014 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடி வரும் அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.

ரிங்கு சிங்கின் தந்தை கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அதேபோன்று அவரது சகோதரர்கள் இருவரும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வருகிறார்கள். அந்த அளவிற்கு ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்த அவர் தனது குடும்பத்திற்காக பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதனால் சிறு வயதிலேயே துப்புரவு தொழிலாளியாகவும் வேலை பார்த்துள்ளார். இப்படி ஏழ்மையான குடும்பத்தில் இருந்தாலும் தனது கிரிக்கெட் மீது இருந்த ஆசை காரணமாக கடும் முயற்சிகளை மேற்கொண்ட அவர் பதினாறு வயதுக்கு உட்பட்ட உத்தர பிரதேச அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

Rinku Singh 1

அப்படி தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே 83 ரன்கள் குவித்து அசத்தவே அப்போதே அவரது பெயர் பத்திரிகைகளில் எழுதப்பட்டன. மேலும் இடது கை பேட்ஸ்மேனான அவர் சுரேஷ் ரெய்னா போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவதாகவும் பலரும் அவரை பாராட்டி அந்த செய்திகளை பகிர்ந்து இருந்தனர். அதனை கண்ட சுரேஷ் ரெய்னாவும் அவரது கிரிக்கெட் வளர்ச்சிக்கான உதவிகளை தனிப்பட்ட முறையில் செய்தார். பின்னர் 2017-ஆம் ஆண்டு வாக்கில் அவரது செயல்பாடுகளை கவனித்த பஞ்சாப் அணி அவரை 20 லட்ச ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுத்தது.

- Advertisement -

அதன் பிறகும் அவர் பல்வேறு கிளப் போட்டிகளிலும் விளையாடி தனது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனை கவனித்து வந்த கொல்கத்தா அணி அவரை 2018-ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக போட்டி போட்டு 80 லட்சம் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. அப்படி இருந்தாலும் ஒரு சில தொடர்களில் வாய்ப்பு கிடைக்காத அவருக்கு கடந்த சீசனில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்படி கடந்த ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 23 பந்துகளை சந்தித்து 42 ரன்கள் குவித்த அவர் மேட்ச் வின்னராகவும் திகழ்ந்தார். அதோடு லக்னோ அணிக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம் அவரை வேறு கட்டத்திற்கும் கொண்டு சென்றது.

இதையும் படிங்க : IPL 2023 : இப்போ ஹேப்பியா? 1 ரன்னில் சதம் நழுவியும் சிரித்த முகத்துடன் ஹர்ஷா போக்லேவுக்கு தவான் பதிலடி – நடந்தது என்ன

இப்படி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் அற்புதமாக பயன்படுத்திய அவர் இந்த ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறியதால் இந்த ஆண்டு தொடர்ச்சியாக விளையாடுகிறார். இப்படி இந்த ஐபிஎல் தொடரிலும் தனக்கு கிடைத்த மூன்று வாய்ப்புகளிலும் அற்புதமாக செயல்பட்டு வரும் அவரை தற்போது கொல்கத்தா அணி நிரந்தர வீரராக மாற்றியுள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு கொல்கத்தா அணி வாய்ப்பு வழங்கி அவரை மிகப்பெரிய வீரராகவும் தற்போது உருவாக்கி வருகிறது. அவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்து ரசிகர்களும் அவரை பாராட்டி தங்களது கருத்துக்களை சமூகவலைதளம் மூலமாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement