IPL 2023 : இப்போ ஹேப்பியா? 1 ரன்னில் சதம் நழுவியும் சிரித்த முகத்துடன் ஹர்ஷா போக்லேவுக்கு தவான் பதிலடி – நடந்தது என்ன

Shikhar dhawan harsha bhogle
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 தொடரில் ஏப்ரல் 9ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 14 வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஹைதராபாத் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கடுமையாக போராடி 143/9 ரன்கள் குவித்தது. சொல்லப்போனால் அந்த அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 0, மேத்தியூ ஷார்ட் 1, ஜிதேஷ் சர்மா 4, சாம் கரண் 22, சிக்கந்தர் ராசா 5, சாருக் கான் 4 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஹைதராபாத்தின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 15 ஓவரில் 88/9 என சரிந்த அந்த அணி 100 ரன்களை தான்டாது என்று அனைவரும் நினைத்தாலும் மறுபுறம் தொடக்க வீரராக களமிறங்கி நங்கூரமாக போராடிய கேப்டன் ஷிகர் தவான் 10வது வீரராக களமிறங்கிய மோகித் ராதேவுடன் இணைந்து 10வது விக்கெட்டுக்கு 55* ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினார். குறிப்பாக மோகித் ராதே 2 (1* ரன்) பந்துகள் மட்டும் எதிர்கொள்ளும் அளவுக்கு எஞ்சிய பந்துகள் அனைத்தையும் தாமே எதிர்கொண்டு போராடிய அவர் நடராஜன் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தும் 12 பவுண்டரி 5 சிக்சருடன் 99* (66) ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

- Advertisement -

சிரித்த முகம்:
ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக மயங் மார்க்கண்டே 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 144 ரன்களை துரத்திய ஹைதராபாத்துக்கு ராகுல் திரிபாதி 74* (48) ரன்களும் ஐடன் மார்க்ரம் 37* (21) ரன்களும் எடுத்து முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். ஆனாலும் இப்போட்டியில் சதத்தை தவற விட்டதற்காக ஷிகர் தவானை விட ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சோகத்தை வெளிப்படுத்தினார்கள். இருப்பினும் எஞ்சிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து வெறும் 38 ரன்கள் எடுத்த நிலையில் தனி ஒருவனாக போராடி 99* ரன்கள் குவித்த அவர் சதம் தவறி போனதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் மோசமான தோல்வியிலிருந்து காப்பாற்றி மகிழ்ச்சியில் முகம் நிறைய சிரிப்பை வெளிப்படுத்தினார்.

அதை விட ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முந்தைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப்புக்கு முதல் 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்த ஷிகர் தவான் அடுத்த 26 பந்துகளில் சற்று அதிரடியாக விளையாடிய 56 ரன்கள் குவித்து மொத்தம் 86* ரன்கள் விளாசினார். அதனால் 197/4 ரன்கள் எடுத்த பஞ்சாப் 200 ரன்கள் தொடும் வாய்ப்பை அவருடைய ஆரம்பகட்ட பொறுமையான ஆட்டத்தால் நழுவ விட்டது. அதனால் முதல் 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்த அவருடைய ஆட்டம் தோல்வியை கொடுக்கலாம் என்று பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போகலே தனது ட்விட்டரில் விமர்சித்திருந்தார்.

- Advertisement -

ஆனாலும் அன்றைய நாளின் இறுதியில் பஞ்சாப் வென்றதால் ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுத்தனர். அந்த நிலையில் இந்தப் போட்டியில் தனி ஒருவனாக போராடி 99* ரன்கள் குவித்த ஷிகர் தவான் மொத்தமாக 225 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை ருதுராஜிடம் (189 ரன்கள்) இருந்து தன்வசமாக்கினார். அதை இப்போட்டியில் வர்ணையாளராக செயல்பட்ட ஹர்ஷா போக்லே நேரடியாக பாராட்டி தனது கையாலேயே கொடுக்கும் நிலை ஏற்பட்டது.

அப்போது அதை சிரித்து முகத்துடன் வாங்கி தலையில் அணிந்து கொண்ட சிக்கர் தவான் “இப்போது என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் (150.00)உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று நம்புகிறேன்” என கூறி நேரடியாக அவருக்கு பதிலடி கொடுத்தார். அதற்கு “அந்த போட்டியும் சூழ்நிலையும் முற்றிலும் மாறுபட்டது” என்று ஹர்ஷாவும் சிரித்த முகத்துடனேயே பதிலளித்தார். முன்னதாக சமீப காலங்களாகவே 2020, 2021, 2022 சீசன்களில் 500க்கும் மேற்பட்ட ரன்களை தொடர்ச்சியாக குவித்து வரும் சிகர் தவான் அதை அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் குவிக்க தடுமாறுகிறார் என்ற காரணத்தாலும் 37 வயதை தொட்டுவிட்டார் என்பதாலும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டுள்ளது.

இதையும் படிங்க: IPL 2023 : தோனி மட்டும் முடிவு பண்ணிட்டா கடவுளே வந்தாலும் அதை தடுக்க முடியாது – ஹர்பஜன் சிங் கருத்து

ஆனாலும் அதற்காக கவலைப்படாமல் தொடர்ந்து போராடி வரும் மிஸ்டர் ஐசிசி என்றழைக்கப்படும் ஷிகர் தவான் ஆரஞ்சு தொப்பியை வென்று 2023 உலக கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

Advertisement