IPL 2023 : தோனி மட்டும் முடிவு பண்ணிட்டா கடவுளே வந்தாலும் அதை தடுக்க முடியாது – ஹர்பஜன் சிங் கருத்து

Harbhajan-and-Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டிக்கு போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் ரசிகர்கள் மத்தியில் விருந்து படைத்து வருகிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளை வீழ்த்த அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்று தற்போது முன்னிலை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் சரிவை சந்தித்த சென்னை அணி தற்போது மீண்டும் அவரது தலைமையில் எழுச்சி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த ஆண்டு தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்பதனால் வெற்றியுடன் அவரை வழி அனுப்ப வேண்டும் என்பதே பலரது பேச்சுகளாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், சென்னை அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது : தல தோனி ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டா அது கடவுளே வந்து தடுத்தாலும் தவிடு பொடி தான். குதியாட்டம் போடுற எதிர் டீமுக்கு முன்னாடி பேட்டைக்காளியா நின்னு சம்பவம் செஞ்சு இந்த சென்னை அணிக்கு தாயும்.. தகப்பனும்மா அவர் இருக்கும்போது ஐ.பி.எல்-யில் இவனை வெல்ல எவன் இங்கு என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் சென்னை அணி ஜெயிக்க வேண்டும் என்று தோனி முடிவெடுத்து விட்டால் அவரை தடுக்க வேறு யாரும் இல்லை அவரே சிறந்த கேப்டன் என ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை அணி கடைசியாக மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது மீண்டும் தாங்கள் வலுவாக திரும்பியுள்ளதை வெளிகாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : வீடியோ : 9 வருடங்களுக்கு பின் ஐபிஎல் வரலாறு படைத்த ரசித் கான், டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுப்பதில் உலக சாதனை

ஏனெனில் பந்துவீச்சின் போதும் மும்பை அணியை வெகு சிறப்பாக அடக்கிய சிஎஸ்கே அணி பேட்டிங்கிலும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் என்கிற இலக்கினை வெகு எளிதாக துரத்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இனிவரும் போட்டிகளிலும் சென்னை அணியின் வெற்றி உறுதி என ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement