மனைவி குழந்தைகளுடன் ஒரு மணிநேரம் விமான நிலையத்தில் தவித்த இந்திய வீரர் – நடந்தது என்ன?

Mumbai-Airport
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான இர்பான் பதான் கடந்த 2003-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2012-ஆம் ஆண்டு வரை 29 டெஸ்ட் போட்டிகள், 120 ஒருநாள் போட்டிகள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டும் இன்றி ஐபிஎல் தொடரில் 2008 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் 103 போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.

Pathan

- Advertisement -

தான் விளையாடிய காலத்தில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக வளம் வந்த இர்ஃபான் பதன் தற்போது ஓய்விற்கு பிறகு கிரிக்கெட் தொடர்பான பணிகளையே மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தனக்கு மும்பை விமான நிலையத்தில் நடந்த ஒரு மோசமான சம்பவத்தை அவர் வேதனையுடன் பகிர்ந்து உள்ளார்.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் துபாய் பயணத்தின் போது விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் தனக்கு நடந்த ஒரு மோசமான சம்பவம் குறித்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் கடந்த புதன்கிழமை மும்பையில் இருந்து துபாய்க்கு விஸ்தாரா விமானம் மூலம் பயணம் செய்தேன். அப்போது செக் இன் கவுண்டரில் எனக்கு நடந்த மோசமான சம்பவம் யாதெனில் :

Irfan Pathan Family

ஏற்கனவே நான் எனது டிக்கெட் வகுப்பை புக் செய்த பிரிவிலிருந்து என்னை கேட்காமலேயே டவுன் கிரேடிங் செய்தனர். அதுமட்டும் இன்றி என்னுடைய மனைவி, எட்டு மாத குழந்தை மற்றும் ஐந்து வயது குழந்தை ஆகியோருடன் ஒரு மணி நேரம் என்னை விமானநிலையத்திலேயே காத்திருக்க வைத்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு சூழல் எனக்கு மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்டது மிகவும் வருத்தமாக உள்ளது. அதோடு விமான ஊழியர்கள் முரட்டுத்தனமாகவும், கடினமாகவும் நடந்து கொண்டனர். மேலும் அவர்கள் எங்களை காக்க வைத்ததற்கு பல சாக்கு போக்குகளை கூறினர். என்னை போல் மேலும் இரண்டு பயணிகளும் அதே நிலையை அனுபவிக்க வேண்டியிருந்தது.

இதையும் படிங்க : இவர கழற்றிவிட எப்படி மனசு வந்துச்சு, சின்னத்தல ரெய்னா மீது பாசத்தை பொழியும் சென்னை ரசிகர்கள் – என்ன நடந்தது

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற சம்பவங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நான் எதிர்கொண்ட இந்த மோசமான அனுபவத்தை வேறு யாரும் எதிர்கொள்ளக் கூடாது என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement