இவர கழற்றிவிட எப்படி மனசு வந்துச்சு, சின்னத்தல ரெய்னா மீது பாசத்தை பொழியும் சென்னை ரசிகர்கள் – என்ன நடந்தது

Raina
- Advertisement -

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கடந்த 2005 – 2018 வரையிலான காலகட்டத்தில் ஏராளமான போட்டிகளில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அவர் போட்டியை நிர்ணயிக்கும் கணிசமான ரன்களை கச்சிதமாக அடித்து இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர். குறிப்பாக 28 வருடங்கள் கழித்து வென்ற 2011 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியிலும் அவர் அடித்த முக்கிய ரன்கள் தான் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியதாக அப்போதைய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் இப்போதும் சொல்வார்.

அந்தளவுக்கு பெரிய வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவர் 2013இல் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணியின் வெற்றியிலும் இன்றியமையாதவராக இருந்தார். பகுதி நேர பந்து வீச்சாளராக எதிரணி போடும் பார்ட்னர்ஷிப்களை தகர்த்த அவர் இந்தியா கண்டெடுத்த மிகச்சிறந்த பீல்டர்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார். அதே போல் இன்று உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக ஜொலிக்கும் ஐபிஎல் தொடரில் 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர் தனது அதிரடி சரவெடியான பேட்டிங்கால் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் வெளுத்து வாங்கி ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்தார்.

- Advertisement -

கழற்றிவிடப்பட்ட ரெய்னா:
குறிப்பாக 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான அணியாக சென்னை திகழ்வதற்கு கேப்டன் தோனியின் தளபதியாக செயல்பட்ட இவரை தமிழக ரசிகர்கள் சின்னத்தல என்று தோனிக்கு நிகராக கொண்டாடினார்கள். மேலும் 2018க்கு முன்பு வரை ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக முதலிடத்தில் இருந்த அவரை வல்லுநர்கள் மிஸ்டர் ஐபிஎல் என்று போற்றுகிறார்கள். அப்படிபட்ட அவரை 2021இல் பார்மை இழந்து சுமாராக பேட்டிங் செய்ததால் காயத்தால் வெளியேறியதை பயன்படுத்திய சென்னை நிர்வாகம் அடுத்த சீசனில் பெஞ்சில் கூட அமர வைக்காமல் மொத்தமாக கழற்றி விட்டு அவமானப்படுத்தியது.

அதனால் நன்றி இல்லாமல் நடந்து கொண்ட சென்னை நிர்வாகத்தை அனைத்து ரசிகர்களும் கடுமையாக விமர்சித்தனர். இருப்பினும் நிதர்சனத்தை புரிந்து கொண்ட அவர் மனம் தளராமல் வர்ணனையாளராக அவதாரமெடுத்து தன்னை கழட்டிவிட்ட சென்னைக்கு விசில் போட்டு ஆதரவு கொடுத்தார். ஆனாலும் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 10 தோல்விகளை சந்தித்து லீக் சுற்றுடன் சென்னை வெளியேறியதற்கு அவரை புறக்கணித்தது தான் காரணம் என்று இப்போதும் நிறைய ரசிகர்கள் வெளிப்படையாக பேசுவதை பார்க்க முடிகிறது.

- Advertisement -

சென்னையின் பாசம்:
அதற்கேற்றார்போல் வரலாற்றில் அவரில்லாமல் இதுவரை சென்னை எந்த ஒரு கோப்பையும் வென்றது கிடையாது. அதே போல் அவரில்லாத 2020, 2022 சீசன்களில் சென்னை பிளே சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை. அப்படி சென்னையின் நம்பிக்கை நாயகனாக கருதப்படும் அவரை அணி நிர்வாகம் கழற்றி விட்டாலும் தமிழக ரசிகர்களும் மக்களும் அவரை எப்போதும் தங்களது மனதிலிருந்து நீக்கவில்லை. அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் வேல்ஸ் யுனிவர்சிட்டி சார்பாக கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஆற்றிய பங்கை பாராட்டும் வகையில் சுரேஷ் ரெய்னாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

அப்போது சென்னைக்கு எனது மனதில் எப்போதும் தனி இடமுள்ளது. இது என்னுடைய 2வது வீடு என்று அவர் தெரிவித்தது நிறைய தமிழக ரசிகர்களின் நெஞ்சங்களை தொட்டது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றதாலும் சென்னைக்காக விளையாடாததாலும் நீண்ட நாட்களாக களமிறங்கி கிரிக்கெட் விளையாடாத சுரேஷ் ரெய்னா தற்போது தனது சொந்த ஊரில் மீண்டும் கிரிக்கெட் பயிற்சிகளை துவக்கியுள்ளார்.

- Advertisement -

ரசிகர்கள் பாசம்:
அதில் ஸ்பெஷல் என்னவெனில் சென்னை நிர்வாகம் தன்னை மறந்தாலும் அந்த அணியையும் ரசிகர்களையும் மறக்காத சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் பயிற்சி ஜெர்சியை அணிந்துகொண்டு பயிற்சி எடுத்தார். அதை பார்த்த சென்னை ரசிகர்கள் இவ்வள்வு விஸ்வாமிக்க இவரை போய் நன்றி இல்லாமல் நிக்கி விட்டீர்களே என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தை சமூக வலைதளங்களில் மீண்டும் விளாசுகிறார்கள்.

இதையும் படிங்க: பர்ஸ்ட் செஞ்சுரி அடிச்சிட்டாரு இல்ல. இனிமே தான் சுப்மன் கில்லுக்கு பிரச்சனையே இருக்கு – முன்னாள் வீரர் எச்சரிக்கை

அதே சமயம் சென்னை மீதான அன்பையும் பாசத்தையும் மறக்காத அவரை “சின்னத்தல” என்று அழைத்து பதிலுக்கு பாசத்தையும் ரசிகர்கள் வெளிப்படுத்துகின்றனர். மேலும் நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் பயிற்சி எடுக்க துவங்கியுள்ள அவர் விரைவில் ஏதேனும் கிரிக்கெட்டில் விளையாட போகிறாரா என்ற ஆர்வமும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement