ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட ஆல்டைம் இந்திய டெஸ்ட் லெவன் அணி – வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

IND
- Advertisement -

கிரிக்கெட்டில் தங்களது அபார திறமையால் உலகின் எந்த ஒரு இடத்திலும் எப்பேர்ப்பட்ட தரமான எதிரணி வீரர்களையும் சமாளித்து தனது நாட்டிற்கு வெற்றியைத் தரமான வீரர்களை எதிரணி ரசிகர்கள் கூட மதித்துப் பாராட்டுவார்கள். அவர்கள் ஓய்வு பெற்றாலும் கூட கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிப்பதால் காலம் கடந்தும் அவர்களின் பெயர் எப்போதுமே புகழின் உச்சியில் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த வகையில் அது போன்ற தரமான வீரர்களை வைத்து ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களும் வல்லுநர்களும் ரசிகர்களும் தங்களது கனவு அணியை தேர்வு செய்து அவ்வப்போது வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும்.

அதிலும் சச்சின் டெண்டுல்கர் போன்ற நட்சத்திர தரமான வீரர்கள் ஒரு கனவு அணியை வெளியிடுகிறார் என்றால் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கிடப்பார்கள். அந்த அளவுக்கு கனவு அணி என்பது கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். சொல்லப்போனால் ஒவ்வொரு வருடமும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை வைத்து 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கனவு அணியை உருவாக்கி அந்த வீரர்களை ஐசிசி கவுரவித்து வருகிறது.

- Advertisement -

ஐஸ்லாந்து இந்திய கனவு அணி:
அந்த வகையில் கத்துக் குட்டியான அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தனது இந்திய டெஸ்ட் கனவு அணியை அறிவித்துள்ள நிலையில் அது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் டிராவிட் தலைமையில் சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், விஜய் ஹசாரே, எம்எஸ் தோனி (கீப்பர்), கபில்தேவ், ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே ஜவகல் ஸ்ரீநாத், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தேர்வு செய்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதோடு நிற்காமல் 12-ஆவது வீரராக விராட் கோலியை தேர்வு செய்தது இந்திய ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

எப்படி முன்னேறுவிங்க:
காரணம் கடந்த 2011இல் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் காலடி வைத்த அவர் சமீபத்தில் 8000+ ரன்களைக் குவித்து சாதனை படைத்ததுடன் கடந்த பல வருடங்களாக தனது அபார திறமையால் இந்தியாவிற்கு பல வெற்றிகளை தேடி கொடுத்துள்ளார். அதைவிட கடந்த 2014-ஆம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற போது ஐசிசி தரவரிசையில் 7-வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை அதிரடியான மாற்றங்களை செய்து ஆக்ரோசம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக அடுத்த 2 வருடத்திலேயே உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக உயர்த்தி காட்டினார்.

- Advertisement -

குறிப்பாக 2016 – 2021 வரை தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக அவர் தலைமையில் வெற்றிநடை போட்ட இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து டெஸ்ட் தொடரை வென்று சரித்திர சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் கேப்டனாக பொறுப்பேற்ற போது சொந்த மண்ணில் மட்டும் வெற்றி பெறும் அணியாக இருந்த இந்தியாவை இன்று இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற உலகின் எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறும் அணியாக மாற்றிய முழு பெருமைக்கும் அவர் சொந்தக்காரர் என்றே கூறலாம்.

அப்படி உலகத்தரம் வாய்ந்த அணியாக இந்தியாவை உருவாக்கி எதிரணிகளை மிரட்டிய அவர் கடந்த ஜனவரி மாதம் பணிச்சுமை காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகி சாதாரண வீரராக விளையாடத் தொடங்கி உள்ளார். இருப்பினும் மொத்தம் 68 போட்டிகளில் 40 வெற்றிகளை குவித்துள்ள அவர் இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்ற மாபெரும் சரித்திர சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

அந்த அளவுக்கு தரம் வாய்ந்த விராட் கோலியை நீங்கள் கேப்டனாக தேர்வு செய்யாதது கூட பரவாயில்லை போயும் போயும் 12-ஆவது வீரராக கூல்டிரிங்ஸ் தூக்குவதற்காக தேர்வு செய்தீர்களா என்று இந்திய ரசிகர்கள் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தை விளாசுகின்றனர்.

இதையும் படிங்க : தோனியை பாத்து கத்துக்கோங்க. உங்களலாம் என்ன சொல்றது? – பாண்டியாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

மேலும் ஒரு கத்துக்குட்டியாக இருந்து கொண்டு இந்திய கிரிக்கெட் வரலாற்றை ஒழுங்காக தெரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு அணியை தேர்வு செய்யச் சொல்லி உங்களை யாரும் கேட்கவில்லை என திட்டி தீர்க்கும் இந்திய ரசிகர்கள் அதன் காரணமாகவே நீங்கள் இன்னும் முன்னேறாமல் இப்படியே இருக்கிறீர்கள் என்றும் விமர்சிக்கின்றனர். மேலும் இது விராட் கோலியை அவமானப்படுத்தும் செயல் உட்பட பல்வேறு வகைகளில் ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியத்தை இந்திய ரசிகர்கள் சாடி வருகின்றனர்.

Advertisement