தோனியை பாத்து கத்துக்கோங்க. உங்களலாம் என்ன சொல்றது? – பாண்டியாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Pandya-1
Advertisement

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்-ரவுண்டராக இருந்து வரும் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறிய பின்னர் குஜராத் அணிக்காக தற்போது கேப்டனாக பங்கேற்று விளையாடி வருகிறார். இவரது தலைமையில் அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றிகளை பெற்ற குஜராத் அணி கடைசியாக நடைபெற்ற சன்ரைஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரே ஒரு தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியின் போது முக்கியமான கட்டத்தில் 13வது ஓவரை கேப்டன் பாண்டியா வீசினார்.

pandya

அந்த ஓவரின் 2வது மற்றும் 3வது பந்தை எதிர்கொண்ட சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அடுத்தடுத்து சிக்சருக்கு பறக்க விட்டார். இதன் காரணமாக சற்று கடுப்பாகி இருந்த ஹர்டிக் பண்டியா மைதானத்தில் வீரர்களிடம் வெளிப்படையாக தனது கோபத்தை காண்பித்தார். அதிலும் குறிப்பாக ராகுல் த்ரிப்பாதியை ஆட்டமிழக்க கிடைத்த ஒரு வாய்ப்பை தவறவிட்ட இந்திய அணியின் சீனியர் முகமது ஷமியை மைதானத்தில் வெளிப்படையாகவே கடுமையாக திட்டினார்.

- Advertisement -

டீப் தேர்டு மேன் திசையில் கேட்ச்க்கு வந்த பந்தை பிடிக்காமல் ஓரடி பின்னே சென்று பவுண்டரியை தடுக்கலாம் என்று ஷமி அவ்வாறு பிடித்தார். இதன் காரணமாக ஷமியை நோக்கி பாண்டியா முகம் சுளித்ததோடு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினார்.

mukesh

இந்நிலையில் பாண்டியா இவ்வாறு கடுமையாக நடந்து கொண்டது தவறு என்று ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருவதோடு தோனியுடன் ஒப்பிட்டு பாண்டியா சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறி வருகின்றனர். அந்த வகையில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது இளம் வீரரான முகேஷ் சவுத்ரி இரண்டு எளிதான கேட்சிகளை தவறவிட்டார்.

- Advertisement -

ஆனாலும் அவர் மீது எந்த கோபத்தையும் காண்பிக்காத தோனி அவரிடம் சென்று நட்பு பாராட்டி அவர் தோள் மீது கைபோட்டு அவரின் மனநிலையை சாதாரணமாகி சில அறிவுரைகளை வழங்கினார். அதன்பின்பு முகேஷ் நல்ல பீல்டிங் செய்தார். இதனை தற்போது ஒப்பிட்டு பேசி வரும் ரசிகர்கள் எந்த நேரத்திலும் வீரர்களை ஊக்குவிப்பதில் தோனியை போல நடந்து கொள்ளுங்கள் என்று கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க : சர்வேயின் அடிப்படியில் ஐ.பி.எல் தொடரில் மிகப்பெரிய ஆதரவு பெற்ற அணி இதுதான் – வெளியான புள்ளிவிவரம்

அதோடு ஹர்டிக் பாண்டியா மைதானத்தில் சக வீரர்களிடம் இவ்வாறு கோபத்தை வெளிப்படையாகக் காட்டுவது தவறு என்றும் தோனி முகேஷை பாராட்டிய அந்த சம்பவத்தை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து தோனியை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement