சர்வேயின் அடிப்படியில் ஐ.பி.எல் தொடரில் மிகப்பெரிய ஆதரவு பெற்ற அணி இதுதான் – வெளியான புள்ளிவிவரம்

IPL 2022 (2)
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ரசிகர்களின் மத்தியில் டி20 போட்டிகளின் சுவாரசியத்தை அதிகரிக்க நினைத்து துவங்கிய ஐபிஎல் தொடரானது தற்போது 14 சீசன்களை கடந்து 15 வது சீசனில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் இருந்து ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் ஐபிஎல் தொடரானது தற்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கை வழங்கி வருகிறது.

IPL 2022

- Advertisement -

அதோடு கடந்த ஆண்டு 8 அணிகளுடன் நடைபெற்ற இந்த ஐபிஎல் தொடரானது தற்போது மேலும் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் இந்த ஆண்டு புதிதாக குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் இரண்டு சேர்க்கப்பட்டு மொத்தம் பத்து அணிகளுடன் இரண்டு மாத கால அளவில் நடைபெற்று வருகிறது.

இந்த 15ஆவது ஐபிஎல் சீசனானது துவங்கி தற்போது கிட்டத்தட்ட மூன்றாவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கும் வேளையில் அனைத்து அணிகளும் தங்களது பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு போட்டியும் இறுதி வரை சென்று திரில்லிங்காகவே முடிவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

CSK

இந்நிலையில் தனியார் பத்திரிகை ஒன்றின் சர்வே முடிவின் படி அதிக அளவு ரசித்து பார்க்கப்படும் விளையாட்டாக கிரிக்கெட் பார்க்கப்படுவது மட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவைப் பெற்ற ஐபிஎல் அணி எது என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி அந்த தனியார் பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் :

- Advertisement -

மற்ற விளையாட்டுகளை காட்டிலும் 91% கிரிக்கெட் விளையாட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பு உள்ளதாகவும் அதிலும் குறிப்பாக ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 40.9 மில்லியன் ரசிகர்களை பெற்ற அணியாகும் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : இவர் விளையாடுறத பாத்தா அப்படியே யுவ்ராஜ் சிங் மாதிரி இருக்கு – சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டு

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை கொண்ட அணியாக சிஎஸ்கே மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 4 முறை தோனியின் தலைமையில் ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ள சி.எஸ்.கே ஆரம்பகாலத்தில் இருந்து ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய ஆதரவினை பெற்றுவருகிறது.

Advertisement