ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலம் எப்போது நடைபெறுகிறது ? – வெளியான உறுதியான தகவல்

Auction
Advertisement

2008 ஆம் ஆண்டு இந்தியாவில் துவங்கிய ஐபிஎல் தொடரானது அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறைவடைந்த தொடரோடு சேர்த்து 14 தொடர்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக 15-வது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியது. அந்த தகவல் வெளியானதில் இருந்து ஐபிஎல் தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு இந்த ஐ.பி.எல் தொடர் குறித்த செய்திகளும் நாளுக்கு நாள் வெளியாகி வருகிறது.

IPL
IPL Cup

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடிய 8 அணிகளுடன் புதிதாக இரண்டு அணிகள் சேர்த்து அடுத்த ஆண்டு 10 அணிகளுடன் ஐ.பி.எல் தொடர் நடைபெறும் என்று ஏற்கனவே பி.சி.சி.ஐ அறிவித்தது. அதன்படி புதிய அணிக்கான ஏலமும் துபாயில் நடைபெற்று முடிந்து லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்ட புதிய அணிகள் உருவாக்கப்பட்டுவிட்டன.

அதனை அடுத்து ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தலா 4 வீரர்களை தக்க வைக்கலாம் என்றும் மற்ற வீரர்கள் மெகா ஏலத்தில் விடப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. அந்த வகையில் கடந்த மாத இறுதியில் அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

- Advertisement -

ipl-2021-ind

அதன்படி மொத்தம் 8 அணிகளும் சேர்த்து 27 வீரர்களை தக்க வைத்துள்ளனர். மீதமுள்ள வீரர்கள் அனைவரும் மெகா ஏலத்தில் சென்று புதிய அணிகளில் இணைவார்கள். அதன்படி முக்கியமான அந்த வீரர்களின் மெகா ஏலமானது எப்போது நடைபெறும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு எதிராக பி.சி.சி.ஐ இப்படி நடந்துகொண்டது தவறு – டேனிஷ் கனேரியா கோபம்

இந்நிலையில் அதற்கு விடையாக ஐபிஎல் நிர்வாகம் சார்பில் வெளியான தகவலின் படி இம்மாத இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ இந்த ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் நடைபெறலாம் என்று தெரிகிறது. இந்தியாவில் மும்பை அல்லது சென்னை ஆகிய முக்கிய நகரத்தில் ஏதாவது ஒன்றில் மெகா ஏலம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement