பிஎஸ்எல், பிபிஎல், சிபிஎல் போன்ற டி20 தொடர்கள் ஐபிஎல் தொடரை எப்போதுமே நெருங்க கூட முடியாது – காரணம் இதோ

ipl
- Advertisement -

ஐபிஎல் 2022 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் பெங்களூரு மாநகரில் இன்று கோலாகலமாக தொடங்கியது. பிப்ரவரி 12 மற்றும் 13 என 2 நாட்கள் மெகா அளவில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள். மொத்தம் இருக்கும் 10 ஐபிஎல் அணிகளில் ஏற்கனவே தக்க வைக்கப்பட்ட வீரர்கள் போக அதிகபட்சமாக 217 காலியிடங்கள் உள்ளன. எனவே இந்த 217 காலி இடங்களுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்ய 10 அணிகளும் 561.5 கோடிகளுடன் இந்த மெகா ஏலத்தை சந்திக்கின்றன. இதில் முதல் நாளன்று 161 வீரர்களின் பெயர்கள் மட்டுமே ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

IPL
IPL Cup

பணம் கொழிக்கும் ஐபிஎல்:
வரலாற்றில் கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் கடந்த 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடர் ஒரு தசாப்தத்தை கடந்து 15 வது முறையாக இவ்வருடம் வெற்றிகரமாக நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் என்பது கடந்த 10 வருடங்களில் இந்திய கிரிக்கெட்டை மட்டுமல்லாது உலக கிரிக்கெட்டையே தலைகீழாக மாற்றியுள்ளது எனக் கூறலாம்.

- Advertisement -

தரம் மற்றும் வருமானம் என 2 வகைகளிலும் இந்த ஐபிஎல் டி20 தொடர் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறிவிட்டது. முதலில் தரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது ஒவ்வொரு சீசனிலும் இந்த ஐபிஎல் தொடர் தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு வருகிறது எனக் கூறலாம். ஏனெனில் ஒவ்வொரு வருடம் செல்ல செல்ல ஒவ்வொரு ஐபிஎல் போட்டியும் ரசிகர்களுக்கு த்ரில் விருந்து படைத்து வருகிறது. சொல்லப்போனால் சமீப காலங்களாக பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளில் வெற்றி என்பது கடைசி பந்தில் தான் தீர்மானிக்கப் படுகிறது. சில சமயங்களில் அதையும் தாண்டி சூப்பர் ஓவர் வரை செல்கிறது.

pla

உலககோப்பைக்கும் மேல்:
இதன் காரணமாக ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட ஐபிஎல் தொடர் மிகவும் சுவாரசியமாக உள்ளதாக தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ஒருமுறை தெரிவித்திருந்தார். அதேபோல் உலகக்கோப்பையை விட ஐபிஎல் தொடர் தான் சிறந்தது என இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பலமுறை கூறியுள்ளார். மேலும் இந்த ஐபிஎல் வந்த பின்னர் ஒருநாள் போட்டிகளில் 300 – 350 ரன்களை அடிப்பதெல்லாம் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.

- Advertisement -

இப்படி கிரிக்கெட்டின் அடிப்படை தன்மையை மாற்றியுள்ள ஐபிஎல் டி20 தொடர் வருமானத்தை ஈட்டிக் கொடுப்பதிலும் பல மடங்கு இந்திய கிரிக்கெட்டுக்கு கை கொடுத்துள்ளது. வெறும் 2 மாதங்கள் மட்டுமே நடைபெறும் இந்தத் தொடரில் விளையாட கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக சமீப காலங்களாக தங்கள் நாட்டுக்காக விளையாடுவதை காட்டிலும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக பல கிரிக்கெட் வீரர்கள் ஆர்வம் காட்டுவதை பார்த்து வருகிறோம்.

All

நெருங்கவே முடியாது:
ஐபிஎல் தொடரின் விஸ்வரூப வெற்றியை பார்த்த பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், வங்கதேசம் போன்ற நாடுகள் ஆளாளுக்கு ஒரு டி20 தொடரை நடத்தி வருகிறது. ஆனால் அது போன்ற எந்த ஒரு பிரீமியர் லீக் டி20 தொடரும் ஐபிஎல் தொடரின் அருகில் இன்று மட்டுமல்ல எப்போதுமே நெருங்க முடியாது என அடித்துக் கூறலாம்.

- Advertisement -

இதற்கு காரணத்தைப் பற்றி இப்போது பார்ப்போம். ஐபிஎல் தொடர் போல ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் தொடரில் அதிகபட்சமாக டார்சி சார்ட் எனும் வீரர் 258000 டாலருக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது இந்திய ரூபாயில் சுமார் 1.9 கோடிகளாகும். அதேபோல் பாகிஸ்தானில் நடைபெறும் பிஎஸ்எல் டி20 தொடரில் பிளாட்டினம் பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் போன்ற வீரர்களுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச சம்பளத் தொகை 170000 டாலர்கள் ஆகும். இது இந்திய ரூபாயில் வெறும் 1.27 கோடிகளாகும்.

Star

இதேபோல வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் அதிகபட்சமாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் ரஷீத் கான் 112000 டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது இந்திய ரூபாய் வெறும் 85 லட்சமாகும்.

- Advertisement -

டாப் டக்கர் ஐபிஎல்:
மறுபுறம் ஐபிஎல் தொடரில் இந்த வருடம் லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாட ஒப்பந்தமாகியுள்ள கேஎல் ராகுலின் சம்பளம் மட்டுமே 17 கோடிகளாகும். அத்துடன் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக 90 கோடிகளை வீரர்களை வாங்குவதற்காக செலவழிக்க உள்ளது.

இதையும் படிங்க : ஆசைப்பட்டது சி.எஸ்.கே அணிக்கு. ஆனா கடைசில தினேஷ் கார்த்திகை வாங்கிய அணி – எது தெரியுமா?

அதேபோல ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் 217 வீரர்களை வாங்க அனைத்து ஐபிஎல் அணிகளும் சேர்த்து 561.5 கோடிகளை செலவு செய்ய உள்ளன. இந்த 561.5 கோடிகளை 217 வீரர்களுக்கு பிரித்தால் கூட ஒவ்வொரு வீரருக்கும் தலா 2.58 கோடிகள் சராசரி சம்பளமாக வழங்கலாம். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் வெறும் 85 லட்சத்துக்கு விளையாடும் ரஷித் கான் ஐபிஎல் தொடரில் 15 கோடிகளுக்கு விளையாட உள்ளார். இதிலிருந்தே ஐபிஎல் தொடருக்கும் உலகின் இதர டி20 தொடர்களுக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

மொத்தத்தில் தரத்திலும் சரி பணத்திலும் சரி ஐபிஎல் தொடருக்கு நிகரான தொடர் இந்த உலகில் இல்லை என்பதே நிதர்சனமாகும். அதற்காக மற்ற டி20 தொடரை இங்கே உதாசீனப்படுத்தவில்லை. மாறாக டி20 தொடர்களுக்கு ராஜா என்றால் அது நம் இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் தொடர் என்பதையே உணர்த்தி விரும்புகிறேன்.

Advertisement