ஆசைப்பட்டது சி.எஸ்.கே அணிக்கு. ஆனா கடைசில தினேஷ் கார்த்திகை வாங்கிய அணி – எது தெரியுமா?

karthik
- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஆனால் அவரது தலைமையில் அடுத்தடுத்து அணி தோல்வியை சந்திக்கவே தொடரின் பாதியில் தனது கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் அவர் ஒப்படைத்து விட்டார். அதனைத் தொடர்ந்து அந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்ற கொல்கத்தா அணி இறுதியில் சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.

Karthik

- Advertisement -

அதனைத் தொடர்ந்து கொல்கத்தா அணியால் தினேஷ் கார்த்திக் கழற்றிவிடப்படவே இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்ற தனது விருப்பத்தை மெகா ஏலத்திற்கு முன்பே தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னையை சேர்ந்தவன் நான். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அது அற்புதமாக இருக்கும்.

மேலும் இது நம் கையில் இல்லை என்றும் ஏலத்தில் எந்த அணி என்னை எடுக்கிறதோ அந்த அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் என்று வெளிப்படையாகவே தான் சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசையை தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தியிருந்தார். மேலும் கடந்த பல ஆண்டுகளாகவே அவருக்கு சிஎஸ்கே அணியில் விளையாட வேண்டும் என்பது மிகவும் விருப்பம் இருந்து வருகிறது.

அதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் தினேஷ் கார்த்திக் சென்னை அணியில் தெரிவு செய்யப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த ஆண்டும் சிஎஸ்கே அணியால் அவரை எடுக்க முடியாமல் போனது. ஏலத்தில் சிஎஸ்கே அணி அவரை தேர்வு செய்ய முடிந்த அளவு முயற்சி செய்தாலும் இறுதியில் பெங்களூரு அணி அவரை 5.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

- Advertisement -

இதன் காரணமாக தினேஷ் கார்த்திக் மீண்டும் பெங்களூரு அணியில் விளையாட இருக்கிறார். இந்நிலையில் தினேஷ் கார்த்திகை தவறவிட்டது குறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் சி.எஸ்.கே நிர்வாகம் ஒரு கருத்தையும் பதிவு செய்துள்ளது. இது குறித்து சி.எஸ்.கே அணி நிர்வாகம் பதிவிட்டுள்ள அந்த பதிவில் :

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணி கழட்டிவிட்ட ஷர்துல் தாகூரை ஏலத்தில் எடுத்த அணி எது? எவ்வளவு தொகை தெரியுமா?

“இதில் உங்களை மிஸ் செய்துவிட்டோம். வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக்” என்று குறிப்பிட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் இதுவரை டெல்லி, பஞ்சாப், மும்பை, பெங்களூரு, குஜராத், கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு விளையாடியுள்ள அவர் மொத்தம் 213 போட்டிகளில் விளையாடி 4046 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement