சி.எஸ்.கே அணி கழட்டிவிட்ட ஷர்துல் தாகூரை ஏலத்தில் எடுத்த அணி எது? எவ்வளவு தொகை தெரியுமா?

- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் 15வது சீசனானது மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக தற்போது பெங்களூருவில் ஐபிஎல் வீரர்களின் ஏலம் இன்று துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணி எந்தெந்த வீரர்களை இந்த ஏலத்தில் தேர்வு செய்யும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும் உள்ளது.

csk

ஏனெனில் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு சென்ற அணியாகவும், நான்கு முறை கோப்பையை கைப்பற்றிய அணியாகவும் உள்ள சிஎஸ்கே அணியானது இம்முறை எந்தெந்த வீரர்களின் மீது தங்களது கவனத்தை செலுத்துகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

- Advertisement -

அந்தவகையில் சென்னை அணியில் இருந்து வெளியேறிய வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணியில் இருந்த எந்த வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கும் என்றும் எந்த வீரர்களுக்கு குட்பை சொல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வேளையில் சென்னை அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த ஷர்துல் தாகூர் தற்போது சென்னை அணியில் இருந்து வெளியே சென்றுள்ளார். இந்த ஏலத்தில் போட்டி போட்டு ஏலத்தில் கேட்கப்பட்ட ஷர்துல் தாகூர் இறுதியில் 10.75 கோடிக்கு அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தாகூர் பந்துவீச்சில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழத்தும் திறன் உடையவர் என்பது நாம் அறிந்ததே. அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் கை கொடுக்கும் திறமை அவரிடம் நிறையவே உள்ளது. இந்திய அணிக்காக சமீபகாலமாகவே தனது பேட்டியில் அசத்தி வரும் ஷர்துல் தாகூர் ஒரு ஆல்-ரவுண்டராக படிப்படியாக உயர்ந்து வருகிறார் என்பதை நாம் கண்டு வருகிறோம்.

இதையும் படிங்க : ஆர்.சி.பி இன்னைக்கு தான் இவரை வாங்குனாங்க. அதுக்குள்ள செஞ்சுரி அடிச்சிட்டாரு – அசத்தப்போகும் வீரர்

இதன் காரணமாகவே அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வளவு பெரிய தொகைக்கு அவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்து உள்ளது. 30 வயதாகும் ஷர்துல் தாகூர் இதுவரை 61 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement