ஆர்.சி.பி இன்னைக்கு தான் இவரை வாங்குனாங்க. அதுக்குள்ள செஞ்சுரி அடிச்சிட்டாரு – அசத்தப்போகும் வீரர்

RCB
- Advertisement -

ஐபிஎல் தொடரின் மெகா ஏலமானது இன்று பெங்களூர் நகரில் துவங்கியது. இந்த ஏலத்தில் பதினைந்தாவது ஐபிஎல் சீசனில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் பங்கேற்று தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்குவதில் போட்டி போட்டு தங்களது தேர்வுகளை செய்தனர். அதன்படி இன்றைய போட்டியில் பல வீரர்கள் பல கோடி ரூபாய்க்கும், சில வெளிநாட்டு வீரர்கள் சிலர் குறைந்த விலைக்கும், சிலர் விற்கக்கபடாமலும் சென்றனர்.

hugh

- Advertisement -

அதேபோல் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய வீரர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் சிஎஸ்கே அணிக்காக கடந்த பல சீசன்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், அனுபவமான பேட்ஸ்மேனான ஃபேப் டு பிளேசிஸ் அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மெகா ஏலத்தின் போதும் பெரிய அளவில் அவரை சிஎஸ்கே அணி எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இறுதியில் ஆர்சிபி அணி அவரை ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஐபிஎல் தொடரில் இதுவரை 100 போட்டிகளில் விளையாடி 2935 ரன்கள் குவித்துள்ள இவர் சர்வதேச கிரிக்கெட்டில் மிக அதிக அனுபவம் வாய்ந்தவர்.

faf

தற்போது 37 வயது ஆனாலும் அவர் நல்ல உடல் தகுதியுடன் அட்டகாசமான பார்மில் இருக்கிறார். இதன் காரணமாகவே சிஎஸ்கே அணி அவரின் அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ள அணியில் ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் அப்படி ஏலம் எடுக்கப்பட்ட ஃபேப் டு பிளேசிஸ் தற்போது இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருவது போல பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்த பங்களாதேஷ் தொடரில் கொமிலா விக்டோரியன்ஸ் (CV) அணிக்காக விளையாடி வரும் அவர் இன்றைய டி20 போட்டியிலும் 4-வது வீரராக களமிறங்கி 54 பந்துகளில் சந்தித்த நிலையில் 12 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் காரணமாக இதே சிறப்பான பார்மை நிச்சயம் அவர் ஆர்சிபி அணிக்காக அடுத்து வரும் ஐ.பி.எல் தொடரிலும் வழங்குவார் என்பதால் ஆர்சிபி அணி இவரை தேர்வு செய்ததில் மிக மகிழ்ச்சியாக உள்ளது.

இதையும் படிங்க : முதல் நாள் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன இந்திய வீரர் – வேண்டாம் என்று கூறி மீண்டும் வாங்கிய மும்பை அணி

ஆர்சிபி அணியால் தேர்வு செய்யப்பட்ட இன்று ஃபேப் டு பிளேசிஸ் அதிரடியாக டி20 போட்டியில் சதம் விளாசி உள்ளது ஆர்சிபி ரசிகர்கள் மத்தியிலும் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஏற்கனவே அணியின் துவக்க வீரராக இருந்த தேவ்தத் படிக்கல் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தேர்வாகியுள்ளதால் அந்த இடத்தில் ஃபேப் டு பிளேசிஸ் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement