முதல் நாள் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன இந்திய வீரர் – வேண்டாம் என்று கூறி மீண்டும் வாங்கிய மும்பை அணி

Auction
- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ ஏற்கனவே அறிவித்தபடி இன்று பிப்ரவரி 12-ஆம் தேதி பெங்களூருவில் பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சிறப்பாக நடைபெற்றது. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக இணைந்துள்ள இரண்டு அணிகளும் சேர்ந்து மொத்தம் 10 அணிகள் இந்த மெகா ஏலத்தில் கலந்து கொண்டன. இன்றைய நாள் ஆரம்பத்திலிருந்து பல்வேறு வீரர்கள் இந்த ஏலத்தில் ஏலம் விடப்பட்டனர். அதில் குறிப்பிட்ட சில வீரர்கள் அதிக தொகைக்கும் குறிப்பிட்ட சில வீரர்கள் எதிர்பாராத அளவு தொகையில் சரிவையும் சந்தித்துள்ளனர்.

hugh

- Advertisement -

அதன்படி இந்த முதல்நாள் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய வீரர் பற்றிதான் இந்த பதிவில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இளம் வீரரான இஷான் கிஷன் இன்றைய ஏலத்தில் அதிக தொகைக்கு சென்றுள்ளார்.

3 வயதான இஷன் கிஷன் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி இருந்த அவர் அதனை தொடர்ந்து கடந்த சில சீசன்களாக மும்பை அணிக்காக விளையாடி வந்தார். இதுவரை அவர் 61 போட்டிகளில் விளையாடி 1452 ரன்களை குவித்துள்ளார். அண்மையில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாலும் இளம் இடதுகை அதிரடி துவக்க வீரர் என்ற காரணத்தினாலும் இவர் மீதான கவனம் அனைத்து அணிகளுக்கும் அதிகமாகவே இருந்தது.

ishan
ishan MI

இதன்காரணமாக இவர் ஏலத்தில் விடப்பட்ட போது படிப்படியாக இவரது ஏலத் தொகை அதிகரித்துக்கொண்டே சென்றது. அனைத்து அணிகளும் அவரை வாங்க போட்டா போட்டி போட்ட நிலையில் இறுதியில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி 15.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதன்மூலம் இன்றைய நாளில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக இஷான் கிஷன் திகழ்கிறார்.

- Advertisement -

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை அணி நான்கு வீரர்களை தக்க வைக்கும் போது 4-வது வீரராக சூர்யகுமார் யாதவ்வை தக்கவைக்க நினைத்ததால் இஷான் கிஷன் மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் அப்போது மும்பை அணி அவரை தக்கவைக்க 8 கோடி தருவதாக கூறியிருந்தது. ஆனால் 8 கோடி தனக்கு போதாது என்று இஷான் கிஷன் கூறி மும்பை அணியில் இருந்து வெளியேறி தனது பெயரை மெகா ஏலத்தில் பதிவு செய்து இருந்தார்.

Ishan

அதனால் அப்போது மும்பை அணியால் வேண்டாம் என்று கூறி தக்கவைக்கப்படாத இஷான் கிஷன் தற்போது மீண்டும் அவர் எதிர்பார்த்த தொகையை விட சற்று அதிகமாக 15.25 கோடிக்கு ஏலம் அதே மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இடதுகை அதிரடி ஆட்டக்காரரான இவர் துவக்க வீரராகவும் களமிறங்கி சிறப்பாக செயல்படுவார் என்கிற காரணத்தினால் இவரது மதிப்பு ஏலத்தில் கிடுகிடுவென உயர்ந்தது.

ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இஷான் கிஷனை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் போட்டிபோடும் என்றும் அவர் 30 பந்துகளில் 70 முதல் 80 ரன்கள் குவித்து தனியாளாக ஒரு அணியை வெற்றிபெற வைக்கும் அளவிற்கு திறமைசாலி என்று புகழ்ந்து இருந்த வேளையில் தற்போது அவர் அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement