IND vs RSA : இந்தியாவை வீழ்த்த உதவிய ஐபிஎல் பாதகத்தை அம்பலப்படுத்திய தெ.ஆ வீரர் மகிழ்ச்சி பேட்டி

Rassie Van Der Dussen
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 9-ஆம் தேதியான்று துவங்கியது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 211/4 ரன்கள் சேர்த்தது.

miller

- Advertisement -

இந்தியாவுக்கு ருதுராஜ் – இஷான் கிசான் ஓப்பனிங் ஜோடி 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் ருதுராஜ் 23 (15) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் அதிரடியாக பேட்டிங் செய்த இஷான் கிசான் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (48) ரன்கள் எடுத்து அவுட்டாக மிடில் ஆர்டரில் வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 36 (27) ரன்களும் கேப்டன் ரிஷப் பண்ட் 29 (16) ரன்களும் விளாசி தங்களது வேலையை சிறப்பாக செய்தனர். இறுதியில் நீண்ட நாட்களுக்கு பின் திரும்பிய ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 31* (12) ரன்கள் குவித்து அதிரடியான பினிஷிங் கொடுத்தார்.

சொதப்பிய இந்தியா:
அதை தொடர்ந்து 212 என்ற பெரிய இலக்கை துரத்திய தென்னாபிரிக்காவுக்கு கேப்டன் தெம்பா பவுமா 10 (8) ரன்களில் அவுட்டானாலும் அடுத்து வந்த பிரிடோரியஸ் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 29 (13) ரன்கள் விளாசி அதை சரிசெய்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 22 (18) ரன்களில் ஆட்டமிழந்ததால் 81/3 என அந்த அணி தடுமாறியதால் வெற்றி சமமாக இருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த ராசி வேன் டெர் டுஷன் – டேவிட் மில்லர் ஆகியோர் விக்கெட் விழுவதை தடுத்து நிறுத்தி அதிரடியாக பேட்டிங் செய்ய தொடங்கினர்.

David Miller SA

அதில் ஒருபுறம் டேவிட் மில்லர் அதிரடியாக பேட்டிங் செய்ய மறுபுறம் 29 ரன்களில் தடுமாறிக் கொண்டிருந்த டுஷன் கொடுத்த கேட்ச்சை ஷ்ரேயஸ் ஐயர் பிடிக்காமல் விட்டதை பயன்படுத்திய அவர் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 75* (46) ரன்கள் விளாசினார். மறுபுறம் தடுமாறாமல் மிரட்டிய மில்லர் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 64* (31) ரன்கள் குவித்து சிறப்பான பினிஷிங் கொடுத்ததால் 19.1 ஓவரிலேயே 212/3 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1 – 0* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. இந்த வெற்றிக்கு 64* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

ஐபிஎல் உதவி:
முன்னதாக இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு சமீபத்திய ஐபிஎல் தொடரில் விளையாடியது மிகவும் உதவியதாக போட்டி முடிந்த பின் 75* ரன்கள் குவித்த டுஷன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையாகவே ஐபிஎல் நிறைய உதவியுள்ளது. அதில் எனக்கு விளையாட அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அனைத்து போட்டிகளையும் பார்த்ததால் இந்திய பவுலர்கள் எப்படி வீசுவார்கள், கால சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டேன். தென்னாப்பிரிக்க கால சூழ்நிலைகளை விட இந்தியா வித்தியாசமானது”

vanderdussen

“கடந்த 2 மாதங்களாக இங்கு இருந்ததால் இங்கு நிலவும் வெப்பத்தை சமாளிக்க கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் நான் தடுமாறினாலும் ஐபிஎல் தொடரில் பெற்ற பார்மை டேவிட் மில்லர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி எதிரணி பவுலர்கள் மீது அழுத்தத்தை போட்டது எனக்கு எளிதாக மாறியது. அவர் ஒருசில சிக்ஸர்கள் அடித்ததும் போட்டி எங்கள் பக்கம் திரும்பியது. எனக்கு சற்று அதிர்ஷ்டமும் இருந்தது. இருப்பினும் அதிர்ஷ்டம் என்பது விளையாட்டின் ஒரு பகுதியாகும்” என்று ஷ்ரேயஸ் ஐயர் கேட்ச் விட்டதைப் பற்றி கூறினார்.

- Advertisement -

ஐபிஎல் பாதகம்:
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்காக ஒருசில போட்டிகளில் சுமாராக செயல்பட்டதால் பெரும்பாலும் பெஞ்சில் அமர்ந்திருந்த டுஷன் இந்திய கால சூழ்நிலைகள் மற்றும் பவுலர்களை நன்கு தெரிந்து வைத்திருந்த அனுபவம் முதல் போட்டியில் வெற்றி பெற உதவியதாக கூறினார். அவர் கூறுவதும் 100% க்கு 100% உண்மையாகும். ஏனெனில் குயின்டன் டி காக் காகிசோ, ரபாடா, டேவிட் மில்லர் போன்ற முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியதால் இந்தியாவின் கால சூழ்நிலை மற்றும் பவுலர்களை பற்றி நன்கு தெரிந்து வைத்து தங்கள் நாட்டுக்காக விளையாடும்போது சொல்லி அடிக்கின்றனர்.

Miller 2

அதிலும் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற மில்லர் சமீபத்திய ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக 487 ரன்கள் குவித்து கோப்பையை வெல்ல பினிஷராகவும் துருப்புச் சீட்டாகவும் செயல்பட்டார். ஆனால் இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 தொடரில் பங்கேற்க பிசிசிஐ அனுமதிப்பதில்லை.

இதையும் படிங்க : IND vs RSA : இந்திய பவுலர்கள் அந்த மாதிரி பால்ஸ்ஸ போட்டா விடவே மாட்டேன் – ஆட்டநாயகன் மில்லர் பேட்டி

அதனால் வெளிநாடுகளில் விளையாடும் போது இந்திய வீரர்கள் தடுமாறுகின்றனர். ஆனால் இந்தியாவில் விளையாடும்போது வெளிநாட்டு வீரர்கள் மிரட்டுகின்றனர். இந்த வகையில் ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பாதகமாக அமைந்துள்ளது வேதனைக்குரிய அம்சமாகும்.

Advertisement