IND vs RSA : இந்திய பவுலர்கள் அந்த மாதிரி பால்ஸ்ஸ போட்டா விடவே மாட்டேன் – ஆட்டநாயகன் மில்லர் பேட்டி

Miller-1
- Advertisement -

டெல்லி அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது டி20 போட்டியில் தென்னாபிரிக்க அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வீழ்த்தி இருந்தது. நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது பேட்ஸ்மேன்களின் அதிரடியான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி விளையாட தொடங்கியது.

miller

- Advertisement -

அப்படி சேசிங் செய்கையில் தெம்பா பவுமா 10 ரன்களும், பிரிட்டோரியஸ் 29 ரன்களும், டி காக் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறவே தென் ஆப்பிரிக்க அணி இந்த வெற்றி இலக்கை எட்டாது என்றே பலரும் நினைத்து இருப்பார்கள். ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கிய வேண்டர்டுசன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரது அபாரமான ஆட்டம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 212 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 46 பந்துகளை சந்தித்த வேண்டர்டசன் 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரி என 75 ரன்களையும், அதேபோன்று டேவிட் மில்லர் 31 பந்துகளை சந்தித்து 5 சிக்சர் மற்றும் 4 பவுண்டரி என 64 ரன்களையும் குவித்து அசத்தினார்கள். இந்த போட்டியில் 31 பந்தில் 64 ரன்கள் அடித்து தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

miller 2

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் இந்த வெற்றி குறித்து பேசிய மில்லர் கூறுகையில் : கடைசி சில ஆண்டுகளாகவே நான் எனது ஆட்டத்தில் மிக கடினமான பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். அந்த வகையில் தற்போது எனது ஆட்டம் மிகச்சிறப்பாக மேம்பட்டிருக்கிறது. இது போன்ற மிகப்பெரிய சேசிங்கின் இரண்டு வீரர்கள் இறுதிவரை நிலைத்து நின்று விளையாடுவது அவசியமான ஒன்று.

- Advertisement -

அந்த வகையில் இன்று நாங்கள் இருவரும் நிலைத்து நின்று இறுதியில் சில பெரிய ஓவர்களை விளையாடி வெற்றிகரமாக போட்டியை முடித்துள்ளோம். நான் என்னுடைய பார்ட்னரிடம் கூறியது ஒரே ஒரு விடயத்தை மட்டும் தான். அதிக அளவில் டாட் பாலை விட வேண்டாம் என்றும், லூஸ் பாலுக்காக காத்திருக்கலாம் என்று கூறினேன். மேலும் லூஸ் பால் வந்தால் விடவே கூடாது என்றும் அதனை பவுண்டரிகளாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்தேன்.

இதையும் படிங்க : கேப்டனாக அறிமுகமான பண்ட். கோலிக்கு நடந்த அதே நிகழ்வு – 2 பேருக்கும் ஒரே மாதிரி நடந்த அரிய சம்பவம்

அந்த வகையில் இன்று எனக்கு கிடைத்த அனைத்து எளிதான லூஸ் பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினேன். இந்த தொடரில் இனிவரும் போட்டிகளிலும் இதேபோன்ற பந்துகளை இந்திய அணியின் பவுலர்கள் வீசும் பட்சத்தில் நான் இதே ஆட்டத்தை தொடர்ச்சியாக விளையாட விரும்புகிறேன் என மில்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement