கேப்டனாக அறிமுகமான பண்ட். கோலிக்கு நடந்த அதே நிகழ்வு – 2 பேருக்கும் ஒரே மாதிரி நடந்த அரிய சம்பவம்

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது டி20 போட்டி நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் பவுமா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததன் காரணமாக இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி அணியின் வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவே 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் என்கிற மிகப்பெரிய ரன் குவிப்பை எட்டியது. இந்திய அணி சார்பாக இஷான் கிஷன் 76 ரன்களையும், ஸ்ரேயாஸ் அய்யர் 36 ரன்களையும் குவித்து அசத்தினர்.

INDvsRSA

பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணியானது துவக்கத்தில் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தாலும் டேவிட் மில்லர் மற்றும் வேண்டர்டுசைன் ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் சாதனை கனவை தகர்த்தது என்று கூறலாம். ஏனெனில் 212 ரன்கள் என்கிற இலக்கினை அவ்வளவு சுலபமாக தென்னாப்பிரிக்க அணி எட்டாவது என்று எதிர்பார்த்த வேளையில் அவர்கள் இருவரின் அதிரடி காரணமாக 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 212 ரன்கள் குவித்து தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12 வெற்றிகளை குவித்து இருந்த இந்திய அணியின் சாதனையை பயணமும் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்றைய போட்டியில் சர்வதேச டி20 கிரிக்கெட்டின் கேப்டனாக அறிமுகமான ரிஷப் பண்ட் தான் கேப்டனாக பங்கேற்ற முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்ததால் சற்று அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. ஆனாலும் கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே முன்னாள் கேப்டன் விராத் கோலிக்கும், அவருக்கும் இடையே உள்ள ஒரே மாதிரியான ஒற்றுமைகள் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pant

அந்த வகையில் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த 2017 ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டின் கேப்டனாக அறிமுகமானார். அந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து இருந்தது.

- Advertisement -

அதேபோன்று நேற்றைய போட்டியில் கேப்டனாக பண்ட் அறிமுகமான இந்த போட்டியில் இந்திய அணியை தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான அந்த போட்டியில் விராத் கோலி 26 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோன்று நேற்றைய தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் ரிஷப் பண்ட் 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs RSA : இந்தியாவை சாய்த்து பிறந்தநாளை கொண்டாடும் டேவிட் மில்லர் – ஏபிடியை முந்திய புதிய ஆல் – டைம் சாதனை

இப்படி கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியில் இவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரி ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 5 போட்டிகள் கொண்ட கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தெ.ஆ அணி இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement