என்னது ஐ.பி.எல் ஏலத்தில் இவர் 200 கோடிக்கு ஏலம் போவாரா? – பாகிஸ்தான் வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

Shaheen-afridi
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதில் பங்கேற்ற 590 வீரர்களிலிருந்து 204 வீரர்கள் மட்டுமே இறுதியாக ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த ஏலத்தில் பங்கேற்ற அனைத்து 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை 551 கோடி ரூபாய் செலவு செய்து வாங்கியுள்ளது.

IPL-bcci

- Advertisement -

இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இந்தியாவைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் இஷன் கிஷன் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு சாதனை படைத்தார். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 14 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய வீரர் தீபக் சஹர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தமான இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார்.

வெளிநாட்டு வீரர்கள்:
இந்த ஏலத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், வாசிங்க்டன் சுந்தர் போன்ற பல இந்திய வீரர்கள் மிகவும் நல்ல தொகைக்கு ஒப்பந்தம் செய்யப் பட்டார்கள். அதேசமயம் எப்போதுமே வெளிநாட்டு வீரர்களுக்கு மவுசு உள்ள ஐபிஎல் தொடரில் இந்த வருடமும் பல வெளிநாட்டு வீரர்கள் மிகப்பெரிய தொகைகளுக்கு ஒப்பந்தமானார்கள்.

Ipl-batsman

அந்த வகையில் வெளிநாட்டு வீரர்கள் வரிசையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 11.50 கோடிகளுக்கு ஒப்பந்தமான இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் இந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார். அவருடன் நிக்கோலஸ் பூரான், லாக்கி பெர்குசன் போன்ற வெளிநாட்டு வீரர்களும் 10 கோடிகளுக்கு மேல் ஒப்பந்தமாகி அசத்தினார்கள்.

- Advertisement -

பரிதாப பாக் வீரர்கள்:
உலக கிரிக்கெட் அரங்கில் ஐசிசி உலகக் கோப்பைகளில் வெற்றிபெறும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை விட இந்த ஐபிஎல் ஏலத்தில் ஒரு சில வீரர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக பொருளாதாரத்தில் மோசமாக தவிக்கும் வீரர்கள் கூட ஒரு ஐபிஎல் தொடரில் விளையாடினால் கோடீஸ்வரர்களாக மாறிவிடுகிறார்கள்.

Pak-ipl

மேலும் வெறும் 2 மாதங்கள் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சம்பளமாக கோடிகள் கொட்டிக் கொடுக்கப்படுவதால் சமீப காலங்களாக தங்கள் நாட்டுக்கு விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் விரும்புகிறார்கள். இருப்பினும் இவ்வளவு பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடரில் கடந்த பல வருடங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க முடியாத பரிதாப நிலை இருந்து வருகிறது.

- Advertisement -

200 கோடிகள்:
கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட போது சாகித் அப்ரிடி, சோயப் அக்தர், சோஹேல் டன்விர் போன்ற நட்சத்திர பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடினார்கள். ஆனால் அதன்பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்ளிடையே நிலவிய எல்லைப் பிரச்சினைகள் காரணமாக கடந்த 2010க்கு பின் ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.

shaheen afridi 1

இருப்பினும் ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் ஏலம் நடைபெறும் போது அதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றால் எவ்வளவு கோடிகளுக்கு போவார்கள் என்ற கருத்துக்களை அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உருட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிரட்டி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாஹீன் அப்ரிடி ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றால் 200 கோடிகளுக்கு ஏலம் போவார் என பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சாத்தியமே இல்லை:
இது பற்றி பாகிஸ்தானை சேர்ந்த “இத்திஷாம் உல் ஹக்” எனும் பத்திரிக்கை நிருபர் தனது டுவிட்டரில் “ஷாஹீன் ஷா அப்ரிடி மட்டும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றால் அவர் 200 கோடிகளுக்கு ஏலம் போவார்” என பதிவிட்டார். இதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் என்று கூறலாம். ஏனெனில் இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக பட்சமாக விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் 17 கோடிகளை சம்பளமாக வாங்கியுள்ளார்கள்.

shaheen-afridi

அது மட்டுமல்லாமல் இந்த ஏலத்தில் பங்கேற்கும் ஒரு அணிக்கு தமக்கு தேவையான அதிகபட்ச 25 வீரர்களை தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்ட மொத்த பட்ஜெட் ஏலத்தொகையே வெறும் 90 கோடிகளாகும். அப்படி இருக்க அந்த அடிப்படை தகவல் கூட தெரியாத அவர் எப்படி ஒரு பத்திரிக்கைக்கு நிருபராக உள்ளார் என இந்திய ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகிறார்கள்.

Advertisement