ஐ.பி.எல் ஏலம் விடும் போதே மேடையில் இருந்து மயங்கி விழுந்த ஏலாதாரர் எட்மேட்ஸ் – என்ன நடந்தது?

hugh 1
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது பெங்களூருவில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு இருந்த எட்டு அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு இரு அணிகள் உருவாக்கப்பட்டதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு இந்த ஆண்டு மீண்டும் மெகா ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

auction-1

- Advertisement -

மேலும் இந்த மெகா ஏலம் மூலம் வீரர்கள் அனைவரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை அறிவித்த பின்னர் இன்று மற்ற வீரர்களுக்கான மெகா எலாம் பெங்களுருவில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஒவ்வொரு அணியும் தாங்கள் விரும்பும் வீரர்களை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டு தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மெகா ஏலத்தை முன்னின்று நடத்தும் ஹூக் எட்மேட்ஸ் ஏலத்தை சிறப்பாக நடத்தி வந்த வேளையில் திடீரென நிலை தடுமாறி ஏலம் விடும் மேடையிலிருந்து கீழே விழுந்தார்.

hugh

இதனை கண்ட அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என அனைவரும் சற்று அதிர்ச்சி அடைந்தனர். இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் விடும்போது பேசிக்கொண்டே இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார் .

- Advertisement -

உடனே அவரை அங்கிருந்த அதிகாரிகள் பத்திரமாக அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் அவருக்கு அதிக ரத்த அழுத்தம் காரணமாக நிலைதடுமாறி விழுந்ததாகவும் மற்றபடி பிரச்சனை எதுவும் இல்லை என்றும் அவர் நலமாக இருக்கிறார் என்று தெரிவித்த பின்னர் அவருடைய உடல்நிலை குறித்து முறையான அறிவிப்பு வெளியானது.

இதையும் படிங்க : என்னாங்க இது! ஒருநாள் தொடரை ஜெயிச்சாலும் இந்திய அணி இருக்கும் இக்கட்டான நிலை – நடந்தது என்ன?

மேலும் அவருக்கு பதிலாக ஷாரு சர்மா ஏலத்தை கவனிப்பார் என்று ஐபிஎல் நிர்வாகமும் ட்விட்டர் பக்கத்தின் மூலம் தகவலை வெளியிட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் ஏலத்தை முன்னின்று நடத்தி வரும் எட்மேட்ஸ் இந்த ஏலம் விடும் பணியை 36 ஆண்டுகளாக செய்து வருகிறார் என்பதும் அவர் இந்தத் துறையில் மிகவும் அனுபவசாலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement