என்னாங்க இது! ஒருநாள் தொடரை ஜெயிச்சாலும் இந்திய அணி இருக்கும் இக்கட்டான நிலை – நடந்தது என்ன?

ind
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அன்று துவங்கிய இந்த ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அபாரமாக செயல்பட்ட இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து தொடரில் முன்னிலை வகித்தது. இதை அடுத்து நேற்று நடைபெற்ற இந்த தொடரின் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 80 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

INDvsWI

- Advertisement -

வரலாற்று வைட்வாஷ் வெற்றி:
இதை தொடர்ந்து 266 எடுத்தால் ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்க்கலாம் என்ற நிலையில் நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் பேட்டிங்கில் சொதப்பியது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளைப் போலவே ஆரம்பம் முதலே இந்தியாவின் அபாரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாத அந்த அணியின் பேட்டர்கள் சீரான இடைவெளிகளில் தங்களது விக்கெட்டுகளை இழந்தார்கள்.

இதன் காரணமாக 37.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெஸ்ட் இண்டீஸ் 96 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் பரிதாப தோல்வியை பெற்றது. இந்த வெற்றியின் வாயிலாக 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா “ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வைட்வாஷ் வெற்றியை” பதிவு செய்து சாதனை படைத்தது.

IND

ஒருவர் கூட இல்லையா:
முன்னதாக இந்தப்போட்டி மட்டுமல்லாது இந்த தொடர் முழுவதும் முதல் முறையாக சாதாரண வீரராக ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய நட்சத்திர வீரர் விராட் கோலி நீண்ட நாட்களாக தொட முடியாமல் இருந்து வரும் 71ஆவது சதத்தை அடிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ இந்த போட்டியில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்ததால் 42/3 என இந்தியா மோசமான தொடக்கத்தை பெற்றது.

- Advertisement -

இதனால் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியாவை ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு மீட்டார்கள். இதில் ரிஷப் பண்ட் 56 ரன்களில் அவுட்டாக மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 111 பந்துக்கள் சந்தித்து 80 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் கடைசியாக இந்தியா பங்கேற்ற 10 ஒருநாள் போட்டிகளில் ஒரு இந்தியர் கூட சதம் அடிக்க முடியாமல் இந்தியா பரிதவித்து வருகிறது.

Sky-1

11 ஆண்டுக்கு பின்:
ஆம் கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் கேஎல் ராகுல் சதம் விளாசி 108 ரன்கள் குவித்திருந்தார். அதன்பின் இந்தியா பங்கேற்ற 10 ஒருநாள் போட்டிகளில் எந்த ஒரு இந்திய வீரரும் சதம் அடிக்கவில்லை. இதுபோல ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் சதம் அடிக்க முடியாமல் இந்தியா தவிப்பது இது 2வது தருணமாகும்.

கடைசியாக கடந்த 2011ம் ஆம் ஆண்டு இதேபோல ஒரு கட்டத்தில் இந்தியா விளையாடிய 12 தொடர்ச்சியான ஒருநாள் போட்டிகளில் எந்த ஒரு இந்திய வீரரும் சதம் அடிக்கவில்லை. அதன்பின் தற்போதுதான் 11 ஆண்டுகள் கழித்து அதுபோன்ற ஒரு மோசமான நிலைமை இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஜொலிக்க தவறியதால் 3 – 0 என்ற கணக்கில் படுமோசமான ஒயிட்வாஷ் தோல்வியை இந்தியா சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement