தலையீடு குறைஞ்சுடுச்சு.. இது தான் தோனிக்கு கடைசி ஐபிஎல்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு சாஸ்திரி சோகமான தகவல்

Ravi Shastri
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கைக்வாட் கையில் எம்எஸ் தோனி ஒப்படைத்து விட்டார். கடந்த 2008 முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் இந்தியாவைப் போலவே சிஎஸ்கே அணியையும் சிறப்பாக வழி நடத்தி 5 கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இருப்பினும் 42 வயதை கடந்து விட்ட அவர் சென்ற வருடமே லேசான முழங்கால் வலியுடன் விளையாடினார். எனவே காலத்திற்கும் விளையாட முடியாது என்பதை உணர்ந்து வருங்காலத்தை கருத்தில் கொண்டு ருதுராஜிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை ஒப்படைத்துள்ள தோனி சாதாரண விக்கெட் கீப்பராக மட்டுமே விளையாடி வருகிறார்.

- Advertisement -

கடைசி ஐபிஎல்:
அவருடைய இந்த முடிவு சென்னை ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. அதே சமயம் கேப்டனாக இல்லாமல் போனாலும் விக்கெட் கீப்பராக மட்டும் இன்னும் சில வருடங்கள் தோனி விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்நிலையில் 2022இல் ஜடேஜா கேப்டனாக செயல்பட்ட போது தோனி முக்கிய முடிவுகளை எடுப்பதில் அதிகமாக தலையிட்டதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஆனால் தற்போது எந்த தலையீடும் செய்யாமல் அனைத்து முடிவுகளையும் ருதுராஜ் எடுப்பதற்கு அனுமதிக்கும் தோனி ஓரமாக ஒதுங்குவதை பார்க்க முடிவதாகவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். எனவே இது தான் அவருடைய கடைசி ஐபிஎல் தொடர் என்று உறுதிப்பட வெளிப்படையாக தெரிவிக்கும் ரவி சாஸ்திரி இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இதுவே எம்.எஸ். தோனியின் கடைசி சீசன் சரியா, மிகத் தெளிவாக இருங்கள். தன்னுடைய உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதற்கு தகுந்தார் போல் அவர் இந்த சீசன் முழுவதும் விளையாடுகிறாரா அல்லது பாதி மட்டுமே விளையாடுவாரா என்பது பற்றி காலம் பதில் சொல்லும். ஆனால் தற்போது தோனி எடுத்துள்ள முடிவு “ருதுராஜ் கையில் பாதியிலேயே வேலையை ஒப்படைக்க விரும்பவில்லை. அனைத்தையும் பின்னால் இருந்து பார்க்கிறேன். தேவைப்பட்டால் உதவி செய்கிறேன்” என்பதை சொல்கிறது”

இதையும் படிங்க: எல்லாரும் அதிக ரன்ஸ் அடிக்க விரும்புவாங்க.. ஆனா அதை செய்ய விரும்புறேன்.. சாய் சுதர்சன் பேட்டி

“குறிப்பாக ஜடேஜா கேப்டனாக இருந்த வருடத்தை விட தற்போது தோனி அதிகமாக பின் இருக்கைக்கு செல்கிறார். தண்ணீர் இடைவேளை போன்ற நேரங்களில் மட்டுமே கொஞ்சமாக முக்கிய முடிவுகள் எடுப்பதில் தலையிடுகிறார். அந்த வகையில் ருதுராஜ் தமக்குத் தாமே செயல்படுவதற்கான முழு சுதந்திரத்தையும் தோனி கொடுத்துள்ளார். இம்முறை தோனியின் குறுக்கீடு மிகவும் குறைவாகவே இருப்பதை பார்க்கிறேன்” என்று கூறினார்.

Advertisement