ஐபிஎல் 2024 : பேட்ஸ்மேன்களை அடக்கி பவுலர்கள் சமமாக போட்டியிட.. வரப்போகும் புதிய விதிமுறை.. ரசிகர்கள் மகிழ்ச்சி

IPL Bouncer
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசனை நடத்துவதற்கான வேலைகளை பிசிசிஐ செய்து வருகிறது. அதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப புதுமையை ஏற்படுத்துவதற்காக அவ்வப்போது பிசிசிஐ சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில் கடந்த வருடம் இம்பேக்ட் பிளேயர் எனும் விதிமுறையை அறிமுகப்படுத்தியது புதுமையாகவும் ரசிகர்களை கவர்வதாகவும் அமைந்தது. அதன் படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 11 பேர் கொண்ட அணியில் இல்லாத வீரர் இன்னிங்ஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அம்பயரின் அனுமதியுடன் களமிறங்கலாம்.

- Advertisement -

சமமான போட்டிக்காக:
அந்த வீரர் மற்ற வீரர்களைப் போலவே முழுமையாக பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றை செய்யலாம் என்பது இம்பேக்ட் விதிமுறையின் ஸ்பெஷலாக இருந்து வருகிறது. இந்நிலையில் இம்பேக்ட் விதிமுறையை போல 2024 சீசனில் ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்களை வீசலாம் என்ற புதிய விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வரவுள்ளது.

அதாவது நவீன கிரிக்கெட்டில் ரசிகர்களை கவர்வதற்காக நோபால் போட்டால் ஃபிரீ ஹிட், பவர் பிளே ஓவர்களில் 2 ஃபீல்டர்கள் மட்டுமே உள்வட்டத்திற்கு வெளியே இருப்பார்கள் போன்ற பல்வேறு அடிப்படை விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. அதனால் இப்போதெல்லாம் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடிப்பது உட்பட பெரும்பாலான போட்டிகளில் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன்கள் அசாத்தியமான சம்பவங்களை செய்து வருகிறார்கள்.

- Advertisement -

அதன் காரணமாக இப்போதைய கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமான போட்டி இருப்பதில்லை என்று நிறைய விமர்சனங்கள் காணப்படுகிறது. எனவே அந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக 2024 சீசன் முதல் ஐபிஎல் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவரில் குறைந்தபட்சம் 2 பவுன்ஸர்களை வீசுவதற்கான அனுமதியை கொடுக்கும் விதிமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு முன் ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் மட்டுமே வீச வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 தொடரிலாவது விளையாடுவீங்களா? காயத்துக்கு பின் முதல் முறையாக ரிஷப் பண்ட் பேட்டி

அதையும் சற்று உயரமாக வீசினால் உடனடியாக நடுவர்கள் ஒய்ட் கொடுத்து விடுவார்கள். ஆனால் தற்போது ஒரு ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக 2 பவுன்சர்களை வீசி பவுலர்களும் சமமாக போட்டியிடுவதற்கான விதிமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சொல்லப்போனால் அது 2023 – 24 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் வெள்ளோட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் நல்ல பலன் கிடைத்ததால் ஐபிஎல் தொடரிலும் கொண்டுவரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பவுலர்கள் மற்றும் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement