ஐபிஎல் 2024 தொடரிலாவது விளையாடுவீங்களா? காயத்துக்கு பின் முதல் முறையாக ரிஷப் பண்ட் பேட்டி

Rishabh Pant
- Advertisement -

டெல்லியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கடந்த 2017இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் நிதானமாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் சற்று அதிரடியாக விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ள அவர் தோனியை மிஞ்சி இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக மாபெரும் வரலாறு படைத்துள்ளார்.

அத்துடன் 2021 காபாவில் 89* ரன்களை அடித்து இந்தியாவுக்கு மறக்க முடியாத மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தது உட்பட டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மேட்ச் வின்னராக செயல்பட்டு வருகிறார். அந்த சூழ்நிலையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் தற்போது அதற்கான சிகிச்சைகளை பெற்று வருகிறார்.

- Advertisement -

கம்பேக் எப்போது:
அந்த காயத்தால் 2023 ஐபிஎல் தொடரில் டெல்லியின் கேப்டனாக விளையாடும் வாய்ப்பை இழந்த அவர் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் விளையாடாதது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதை தொடர்ந்து 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையிலும் விளையாடாத அவர் அடுத்ததாக நடைபெறும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கவில்லை.

அதே போல அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் 2024 ஐபிஎல் தொடரிலாவது களமிறங்குவாரா என்ற கேள்வி காணப்படுகிறது. இந்நிலையில் வேகமாக குணமடைந்து வெறும் தாம் இன்னும் 100% குணமடையவில்லை என்று ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். இருப்பினும் அடுத்த 2 மாதங்களில் குணமடைவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி டெல்லி கேபிட்டல்ஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இருந்ததை விட தற்போது நான் நன்றாக குணமடைந்துள்ளேன். இருப்பினும் இன்னும் நான் 100% முழுமையாக குணமடைவதற்கான பயணத்தில் இருக்கிறேன். ஆனால் அடுத்த 2 மாதங்களுக்குள் அதை நான் செய்து முடிப்பேன் என்று நம்புகிறேன்” என்று கூறினார். ஐபிஎல் 2024 தொடர் மார்ச் மாதம் நடைபெற உள்ளதால் ரிஷப் பண்ட் கருத்தை வைத்து அவர் அந்த தொடரில் விளையாடுவதற்கு 99% வாய்ப்புள்ளது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.

இதையும் படிங்க: அவரோட தலைமையில் விளையாடும் சான்ஸ் கிடைச்சா அது என்னோட அதிர்ஷ்டம்.. இளம் தெ.ஆ வீரர் விருப்பம்

அத்துடன் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறும் ஐபிஎல் 2024 வீரர்களுக்கான ஏலத்தில் டெல்லி அணியின் மேஜையில் தாமும் கலந்து கொள்ள உள்ளதாக ரிஷப் பண்ட் கூறியுள்ளார். அந்த வகையில் அவர் மீண்டும் விரைவாக குணமடைந்து விளையாட வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement