அவரோட தலைமையில் விளையாடும் சான்ஸ் கிடைச்சா அது என்னோட அதிர்ஷ்டம்.. இளம் தெ.ஆ வீரர் விருப்பம்

Gerald Cotzee
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு துபாயில் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 10 அணிகளில் வெறும் 77 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கும் நிலையில் அதை பிடிப்பதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 333 வீரர்கள் இந்த ஏலத்தில் போட்டியிட உள்ளது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஏலத்தில் வழக்கம் போல வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக யாரை வாங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

அதிர்ஷ்டம் கிடைக்குமா:
இந்நிலையில் இந்த ஏலத்தில் முதல் முறையாக பங்கேற்கும் தன்மை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்சி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் வெறும் 8 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதன் வாயிலாக உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த தென்னாப்பிரிக்க பவுலர் என்ற ஜாம்பவான் லன்ஸ் க்ளூஸ்னர் (1999இல் 17) சாதனையை தகர்த்த அவர் புதிய வரலாற்று சாதனை படைத்தார். மேலும் 23 வயதிலேயே டேல் ஸ்டைன் போன்ற வெறித்தனமான வேகத்தில் வீசிய அவர் ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று அடுத்த தலைமுறை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தினார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சென்னை அணிக்காக வாங்கப்பட்டால் மகத்தான கேப்டனாக போற்றப்படும் எம்எஸ் தோனி தலைமையில் விளையாடி நிறைய அனுபவத்தை கற்கும் வாய்ப்பு தமக்கு கிடைக்கும் என்று கோட்சி கூறியுள்ளார். எனவே தோனி தலைமையில் விளையாடும் அதிர்ஷ்டமான வாய்ப்பு இந்த ஏலத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: ரோஹித் பதவி பறிபோனதால் மும்பை அணியின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகினாரா சச்சின்? – வெளியான உண்மை தகவல்

“ஒருவேளை எம்எஸ் தோனி தலைமையில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தால் அது வரலாற்றின் ஒரு மகத்தான கேப்டன் தலைமையில் விளையாடி நிறைய திறமைகளையும் அனுபவத்தையும் கற்பதற்கான அற்புதமான வாய்ப்பை எனக்கு கொடுக்கும். சூப்பர் கிங்ஸ் குடும்பம் எப்போதுமே ஸ்பெஷலாக இருக்கிறது. சென்னை மிகவும் பவர்ஃபுல் மற்றும் மகத்தான அணியாக இருந்து வருகிறது” என்று கூறினார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் கேப்டன் டு பிளேஸிஸ் பெங்களூரு அணியில் கேப்டனாக இருக்கும் நிலையில் சென்னை அணியில் தோனிக்காக விளையாட ஜெரால்ட் கோட்சி விரும்புவது சிஎஸ்கே ரசிகர்களை பெருமையடைய வைப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement