ரோஹித் பதவி பறிபோனதால் மும்பை அணியின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகினாரா சச்சின்? – வெளியான உண்மை தகவல்

Sachin-and-Rohit
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டியாவை அதிகாரப்பூர்வமாக அந்த அணியின் நிர்வாகம் அறிவித்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் ஹார்டிக் பாண்டியா வாங்கப்பட்ட போதே மும்பை அணியின் அடுத்த கேப்டனாக அறிவிக்கப்பட இருக்கிறார் என்று அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின.

இதன் காரணமாக ரசிகர்கள் அனைவரும் அதிருப்தி அடைந்த வேளையில் சொன்னது போலவே ஹார்டிக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டு ரோகித் சர்மா ஒரு சாதாரண வீரராக அணியில் தொடர்வார் என்றும் கூறப்பட்டது. மேலும் ஏற்கனவே அணி மாற்றத்துக்கு முன்பாக ஹார்டிக் பாண்டியா மும்பை அணிக்கு வர வேண்டுமெனில் கேப்டனாக தான் வருவேன் என்று கண்டிஷன் போட்டு வந்ததாலே அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்றும் ஒரு தகவல் வெளியாகியது.

- Advertisement -

அதனை தொடர்ந்து ரோஹித் சர்மாவின் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ஏமாற்றத்தை அளிக்கும் செய்தியாக மாறியது. அதோடு மட்டுமின்றி சமூக வலைதளத்தில் ரோஹித்தின் ரசிகர்கள் பலரும் மும்பை அணியை பின் தொடர்வதை தவிர்த்தனர். அதோடு மும்பை அணியின் ஜெர்சி எறித்தும், ஹார்டிக் பாண்டியாவை விமர்சித்தும் பல்வேறு வகையிலும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினார்.

இப்படி மும்பை அணியின் கேப்டன் பதவியில் ஹார்டிக் பாண்டியா நியமிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு காரசாரமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் தற்போது ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் மும்பை அணியின் ஆலோசகராக கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சச்சின் டெண்டுல்கரும் அந்த பதவியில் இருந்து விலகியதாக ஒரு செய்தி சமூக வலைதளத்தில் அதிகளவு பரவி வருகிறது.

- Advertisement -

மேலும் சச்சினுக்கும் ஹார்திக் பாண்டியா புதிய கேப்டனாக மாறியதில் உடன்பாடு இல்லை என்பதன் காரணமாகவே அவர் ஆலோசகர் பதவியில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த விடயம் ஒரு வதந்தி தான் என்பதை மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. அந்த வகையில் நேரடியாக எந்த ஒரு கருத்தையும் அவர்கள் வெளியிடவில்லை என்றாலும் மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து மும்பை அணியுடன் தான் பயணிக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க : அந்த நாளுக்காக காத்திருக்கேன்.. தன்னை வாழ்த்திய அஷ்வினுக்கு.. லயன் கொடுத்த பதிலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

அந்தவகையில் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் : “தி மாஸ்டர் பிளாஸ்டர்” இன்றுடன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 34 ஆண்டுகள் ஆகிறது என்று அவரை பாராட்டி ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அவர் தொடர்ந்து மும்பை அணியிலே பயணிக்கிறார் என்றும் ஆலோசகர் பதவியில் இருந்தெல்லாம் வெளியேறவில்லை என்றும் மும்பை அணி பதிவின் மூலம் உறுதி செய்துள்ளது.

Advertisement