சென்னை அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் யார் யார் தெரியுமா? – வெளியான முழு லிஸ்ட் இதோ

CSK
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையையும் சமன் செய்துள்ளது. அதோடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரானது தோனிக்கு கடைசி தொடர் என்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலம் நடைபெறுவதால் அதற்கு முன்னதாக அனைத்து அணிகளிலும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 26-ஆம் தேதியான இன்று வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கெடுவித்திருந்தது.

- Advertisement -

அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்படும் வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சென்னை அணியில் இருந்து மொத்தமாக எட்டு வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதில் அம்பத்தி ராயுடு மட்டும் ஓய்வினை அறிவித்து வெளியேறியுள்ளார். அவரை தவிர்த்து வெளிநாட்டு வீரர்களாக பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், கைல் ஜேமிசன், சிஸாண்டா மஹாலா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இந்திய வீரர்களாக பகத் வர்மா, சுப்ரன்ஷு சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை அணி அடுத்த சீசனுக்கான ஏலத்தில் ஆறு வீரர்களை தேர்ந்தெடுக்கலாம் என்றும் அதில் மூன்று வெளிநாட்டு வீரர்களையும், மூன்று இந்திய வீரர்களையும் தேர்வு செய்ய சென்னை அணிக்கு உரிமை உள்ளது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியில் மீண்டும் இணைகிறாரா சுரேஷ் ரெய்னா? வெளியான தகவல் – உண்மை விவரம் என்ன?

அதோடு இந்த 8 வீரர்களை தவிர்த்து மற்ற அனைவரது மீதும் நம்பிக்கை வைத்துள்ள சி.எஸ்.கே நிர்வாகம் அவர்களை தக்க வைத்துள்ளது. தற்போதைக்கு வெளியான தகவலின் படி சென்னை அணியிடம் கைவசம் கிட்டத்தட்ட 33 கோடி ரூபாய் இருப்பதால் அவர்கள் நல்ல வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெளியேற்றப்பட்ட 8 வீரர்களை தவிர்த்து தற்போதைய சென்னை அணியில் தோனியின் தலைமையில் 18 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

Advertisement