ஐபிஎல் 2023 : 6வது கோப்பை வெல்லுமா – மும்பை இந்தியன்ஸ் அணியின் முழு அட்டவணை, அணி வீரர்கள்

MI Mumbai Indians
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 2023 சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்குகிறது. அதற்கான வீரர்கள் ஏலம் கடந்த டிசம்பர் மாதம் கொச்சியில் நடைபெற்ற நிலையில் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்கான முழு அட்டவணை பிப்ரவரி 17ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் தனது முதல் போட்டியில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற பின் 2013 – 2020 வரையிலான காலகட்டத்தில் 5 கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்த அந்த அணி கடந்த சீசனில் ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளை சந்தித்து வரலாற்றில் காணாத வீழ்ச்சியை சந்தித்தது.

Mumbai Indians MI

- Advertisement -

குறிப்பாக புள்ளி பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தை பிடித்து அவமானத்தை சந்தித்த அந்த அணிக்கு ரோஹித் சர்மா, பொல்லார்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுள்ள அந்த அணி இந்த சீசனில் கொதித்தெழுந்து 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. குறிப்பாக அந்த அணிக்கு கடந்த வருடம் காயத்தால் களமிறங்காத ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் சமீபத்தில் காயத்தால் விளையாடாமல் இருந்து வரும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் முழுமையாக குணமடைந்து இந்த தொடரில் களமிறங்க உள்ளனர்.

மும்பையின் அட்டவணை:
அந்த வகையில் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்பட காத்திருக்கும் அவர்களுடன் உச்சகட்ட பார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ், இஷான் கிசான் ஆகியோரும் ரோகித் சர்மா தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கடந்த சீசனில் விட்ட வெற்றிகளை இம்முறை கைப்பற்ற உள்ளனர். குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முழு அட்டவணை இதோ:

Mi

1. ஏப்ரல் 2, இரவு 7.30 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V மும்பை இந்தியன்ஸ், பெங்களூர்
2. ஏப்ரல் 8, இரவு 7.30 : மும்பை இந்தியன்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை
3. ஏப்ரல் 11, இரவு 7.30 : டெல்லி கேப்பிடல்ஸ் V மும்பை இந்தியன்ஸ், டெல்லி
4. ஏப்ரல் 16, மதியம் 3.30 : மும்பை இந்தியன்ஸ் V கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை
5. ஏப்ரல் 18, இரவு 7.30 : சன் ரைசர்ஸ் ஹைதராபாத் V மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத்
6. ஏப்ரல் 22, இரவு 7.30 : மும்பை இந்தியன்ஸ் V பஞ்சாப் கிங்ஸ், மும்பை
7. ஏப்ரல் 25, இரவு 7.30 : குஜராத் டைட்டன்ஸ் V மும்பை இந்தியன்ஸ், அகமதாபாத்

- Advertisement -

Mi Mumbai

8. ஏப்ரல் 30, இரவு 7.30 : மும்பை இந்தியன்ஸ் V ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை
9. மே 3, இரவு 7.30 : பஞ்சாப் கிங்ஸ் V மும்பை இந்தியன்ஸ், மொஹாலி
10. மே 6, மதியம் 3.30 : சென்னை சூப்பர் கிங்ஸ் V மும்பை இந்தியன்ஸ், சென்னை
11. மே 9, இரவு 7.30 : மும்பை இந்தியன்ஸ் V ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு
12. மே 12, இரவு 7.30, மும்பை இந்தியன்ஸ் V குஜராத் டைட்டன்ஸ், மும்பை
13. மே 16, இரவு 7.30 : லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் V மும்பை இந்தியன்ஸ், லக்னோ
14. மே 21, மதியம் 3.30 : மும்பை இந்தியன்ஸ் V சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை

இதையும் படிங்க: IND vs AUS : இந்திய மண்ணிலும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆட்டம் காட்டிய பாஸ்ட் பவுலர் – குவியும் பாராட்டு

மும்பை அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), டிம் டேவிட், ரமந்தீப் சிங், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், ட்ரிஸ்தன் ஸ்டப்ஸ், தேவால்ட் பிரேவிஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜஸ்ப்ரிட் பும்ரா, அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷட் கான், குமார் கார்த்திக்கியா, ரித்திக் ஷாக்கீன், ஜேசன் பெஹரன்டாஃப் , ஆகாஷ் மதவால், கேமரூன் க்ரீன், ஜே ரிச்சர்ட்ஸன் , பியூஸ் சாவ்லா, டூயன் ஜான்சன், விஷ்ணு வினோத், ஷம்ஸ் முலானி, நேஹல் வாதீரா, ராகவ் கோயல்

Advertisement