IND vs AUS : ஜடேஜாவை தடுத்து நிறுத்திய அம்பயர்கள். போட்டியின் கடைசி விக்கெட்டில் – ஏற்பட்ட திருப்பம்

Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பிப்ரவரி 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

Rohit-Toss

- Advertisement -

அதன்படி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவிற்கு முன்னதாக தங்களது முதல் இன்னிங்க்ஸை முடித்துக் கொண்ட ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை முடித்துக்கொண்ட ஆஸ்திரேலிய அணியானது அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 263 ரன்களை மட்டுமே குவித்தது.

அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை குவித்து 242 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

Jadeja

இந்நிலையில் நாளை பிப்ரவரி 18-ஆம் தேதி இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சின் இறுதி கட்டத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் கடைசி பேட்ஸ்மேனான பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் அணியின் எண்ணிக்கை 256 ஆக இருந்தபோது ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சில் சிக்ஸ் அடிக்க முயற்சித்து ஆட்டம் இழந்தார். எனவே ஆஸ்திரேலியா அணி 256 ரன்களில் இன்னிங்சை முடித்துக் கொண்டது என்று பெவிலியனை நோக்கி கிளம்பினர்.

இதையும் படிங்க : IND vs AUS : இந்திய மண்ணிலும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆட்டம் காட்டிய பாஸ்ட் பவுலர் – குவியும் பாராட்டு

ஆனால் அப்போது வீரர்கள் அனைவரையும் நிறுத்திய களத்தில் அம்பயர் போட்டி இன்னும் முடியவில்லை ஜடேஜா நோபல் வீசியதாக கூறி அவரை நிறுத்தினார். அடுத்த ஓவரிலேயே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடைசி விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தை முடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement