IND vs AUS : இந்திய மண்ணிலும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆட்டம் காட்டிய பாஸ்ட் பவுலர் – குவியும் பாராட்டு

Shami
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று பிப்ரவரி 17-ஆம் தேதி டெல்லி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் நாளிலேயே 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

Rohit-Toss

- Advertisement -

அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை குவித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணி சார்பாக இந்த முதல் இன்னிங்சில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும், ஜடேஜா மூன்று விக்கட்டுகளையும் விழித்திருந்தனர்.

அதேபோன்று இந்த முதல் இன்னிங்சில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். எப்பொழுதுமே இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சுக்கு அதிக சாதகம் இருக்கும் என்று அனைவரும் பேசப்பட்டு வந்த வேளையில் இன்று 14.4 ஓவர்கள் மட்டுமே வீசிய ஷமி 4 ஓவர்கள் மெய்டனாக வீசியது மட்டுமின்றி 60 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Shami 1

இந்திய அணியில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளருடன் களமிறங்கிய வேளையில் முகமது ஷமி மட்டும் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : சச்சின் உட்பட எங்களால் முடியாததை நீங்க செய்யணும் – கவாஸ்கரின் ஆசையை நிறைவேற்றுவாரா புஜாரா

அதுமட்டும் இன்றி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்திலும் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் ஆஸ்திரேலியா அணியை திணற வைத்தது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement