ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு போட்டி அட்டவணை, அணி வீரர்கள், மைதானங்கள்

Hardik Pandya MS DHoni GT vs CSK
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இம்முறை இந்தியாவில் நடைபெறுகிறது. அதற்கான மினி வீரர்கள் ஏலம் கடந்த டிசம்பர் மாதம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிலையில் 2023 ஐபிஎல் தொடருக்கான முழுமையான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 31ஆம் தேதியன்று அகமதாபாத் நகரில் துவங்கும் இத்தொடரில் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத்தை முன்னாள் சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் வருகிறது.

மொத்தம் 10அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் வழக்கம்போல நடைபெறும் 70 லீக் சுற்று போட்டிகள் அகமதாபாத், மொகாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கௌகாத்தி மற்றும் தரம்சாலா ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து 10 அணிகளும் குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருடம் மிகச் சிறப்பாக செயல்பட்டு 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. ஏனெனில் கடந்த சீசனில் ரவீந்திர ஜடேஜாவிடம் தேவையின்றி கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுத்து ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளை சந்தித்த சென்னை 2020க்குப்பின் வரலாற்றில் 2வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவற விட்டது.

- Advertisement -

முழு அட்டவணை:
இருப்பினும் 2020ஆம் ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக நாக் அவுட் சுற்று வாய்ப்பை இழந்த பின் அடுத்த சீசனில் அபாரமாக செயல்பட்டு 4வது முறையாக கோப்பையை வென்ற அந்த அணி இம்முறையும் அதே போல செயல்பட்டு கோப்பையை வெல்லும் என்று சென்னை ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். மேலும் சென்னையின் ரத்தமும் சதையும் கலந்த இதயமாக கருதப்படும் கேப்டன் தோனி இந்த வருடத்துடன் தமிழக மண்ணில் விடை பெறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளதால் அவருக்காக கோப்பையை வென்று வெற்றிகரமாக வழி அனுப்பும் லட்சியத்துடன் சென்னை வீரர்கள் விளையாடுவார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

CSK Ms DHoni

ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு அட்டவணை இதோ:
1. மார்ச் 31, இரவு 7.30 : குஜராத் டைட்டன்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத்
2. ஏப்ரல் 3, இரவு 7.30 : சென்னை சூப்பர் கிங்ஸ் V லக்னோ சூப்பர் ஜெயின்ஸ், சென்னை
3. ஏப்ரல் 8, இரவு 7.30, மும்பை இந்தியன்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை
4. ஏப்ரல் 12, இரவு 7.30, சென்னை சூப்பர் கிங்ஸ் V ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை
5. ஏப்ரல் 17, இரவு 7.30, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு V சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு
6. ஏப்ரல் 21, இரவு 7.30, சென்னை சூப்பர் கிங்ஸ் V சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை
7. ஏப்ரல் 23, இரவு 7.30, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா

- Advertisement -

8. ஏப்ரல் 27, இரவு 7.30, ராஜஸ்தான் ராயல்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், ஜெய்ப்பூர்
9. ஏப்ரல் 30, மதியம் 3.30, சென்னை சூப்பர் கிங்ஸ் V பஞ்சாப் கிங்ஸ், சென்னை
10. மே 4, மதியம் 3.30, லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ
11. மே 6, மதியம் 3.30, சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ், சென்னை
12. மே 10, இரவு 7.30, சென்னை சூப்பர் கிங்ஸ் V டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை
13. மே 14, இரவு 7.30, சென்னை சூப்பர் கிங்ஸ் V கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை
14. மே 10, மதியம் 3.30, டெல்லி கேப்பிட்டல்ஸ் V சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி

இதையும் படிங்க: வீடியோ : இதை வெச்சே அடுத்த 10 மேட்ச்ல சீட் கன்பார்ம் பண்ணிடுவிங்களே, கேஎல் ராகுல் செயலால் ரசிகர்கள் கலகலப்பு

சென்னை அணி: எம்எஸ் தோனி (கேப்டன்), டேவோன் கான்வே, ருதுராஜ் கைக்வாட், அம்படி ராயுடு, சுபிரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் , டிவைன் பிரிடோரிஸ், மிட்செல் சாண்ட்னெர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி, மதீஷா பதிரானா, சிமர்ஜீத் சிங், தீபக் சஹர், பிரஷாந்த் சோலங்கி, மஹீஸ் தீக்ஷனா, அஜிங்க்ய ரகானே, பென் ஸ்டோக்ஸ், ஷைக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன் , அஜய் மண்டல், பகத் வர்மா

Advertisement