ஐபிஎல் 2022 தொடர் : 10 அணிகள் பங்கேற்பதால் ஏற்பட்டுள்ள மாற்றம் – புதிய பார்மட் பற்றிய விரிவான அலசல்

ipl
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த 2 அணிகளுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வண்ணம் கடந்த 2018க்கு பின் முதல் முறையாக மும்பை, சென்னை உள்ளிட்ட அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு இந்த ஆண்டு வீரர்களுக்கான ஏலம் மெகா அளவில் நடைபெற்றது.

IPL
IPL Cup

பெங்களூருவில் கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற போதிலும் அதில் இறுதியாக 204 வீரர்கள் மட்டுமே 550 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ளார்கள். இந்த ஏலத்தின் முடிவில் தங்களுக்கு தேவையான வீரர்களை அனைத்து அணிகளும் வாங்கியுள்ளதால் 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் இந்த வருடம் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது.

- Advertisement -

முதல் போட்டி – பைனல் தேதி, மைதானங்கள்:
கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் திடீரென பாதியில் நிறுத்தப்பட்டு பின் பல தடைகளைக் கடந்து ஒருவழியாக துபாயில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இருப்பினும் இந்த வருடம் ஐபிஎல் தொடர் எப்படியாக இருந்தாலும் இந்திய மண்ணில்தான் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கடந்த மாதம் அறிவித்திருந்தார். இருப்பினும் வீரர்களின் நலனை கருதி வழக்கமாக 7 – 8 நகரங்களில் நடைபெறும் ஐபிஎல் தொடர் இந்த வருடம் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய 2 மாநிலங்களில் உள்ள முக்கிய மைதானங்களில் மட்டும் நடைபெறும் என சௌரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.

IPL-bcci

அந்த நிலையில் ஐபிஎல் 2022 தொடருக்கான முதல் போட்டி மற்றும் பைனல் போட்டி ஆகியன எப்போது நடைபெறுகிறது என்ற அறிவிப்பு நேற்று பிரபல கிரிக்பஸ் இணையதளத்தில் வெளியானது. அதன்படி வரும் மார்ச் 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒருநாளில் துவங்கும் ஐபிஎல் தொடர் வரும் மே மாதம் 29ஆம் தேதி நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. அதேபோல் 74 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

10 அணிகள்:
இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் ஒரு அணி மும்பையில் உள்ள புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் 4 லீக் சுற்று போட்டியிலும் டிஒய் பாட்டில் மைதானத்தில் 4 லீக் சுற்றுப் போட்டிகளிலும் நவி மும்பையில் உள்ள ப்ராபர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 3 லீக் போட்டிகளிலும் விளையாட உள்ளதாக தெரிகிறது. எஞ்சிய 3 லீக் போட்டிகள் புனே நகரிலுள்ள எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவுள்ளது.

IPLNSG

இந்நிலையில் இந்த வருடம் 10 அணிகள் பங்கு பெறுவதால் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றில் புதிய மாற்றங்கள் நிகழ உள்ளது. அதாவது கடந்த சீசன்களில் நடந்த ஐபிஎல் தொடரில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்றதால் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும் என்ற அடிப்படையில் 14 போட்டிகளில் விளையாடின. ஆனால் இந்த முறை 10 அணிகள் விளையாட உள்ளதால் அவ்வாறு லீக் சுற்றுப் போட்டிகளை நடத்தினால் 90 போட்டிகளை நடத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே அதற்கு பதிலாக புதிய பார்மட் இந்த ஐபிஎல் தொடரில் நடைமுறைக்கு வரவுள்ளது.

- Advertisement -

புதிய பார்மட்:
இந்த வருடம் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாகப் பிரிக்கப்படும். அதில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 அணிகள் இடம்பெற்றிருக்கும். அதில் முதல் குரூப்பில் இருக்கும் ஒரு அணி அதே குரூப்பில் உள்ள எஞ்சிய 4 அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். அதேசமயம் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள 4 அணிகளுடன் தலா 1 போட்டியில் மோத வேண்டும். அத்துடன் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள ஒரு அணியுடன் 2 போட்டிகளில் மோத வேண்டும். அந்த ஒரு அணி ரேண்டம் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

Ipl cup

எடுத்துக்காட்டாக குரூப் பி பிரிவில் ஏ, பி, சி, டி, ஈ ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் ஜே, கே, எல், எம், என் ஆகிய அணிகளும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது குரூப் ஏ பிரிவில் உள்ள ஏ அணி அதே பிரிவில் இடம் வகிக்கும் பி, சி, டி, ஈ ஆகிய அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். இந்த வகையில் 8 போட்டிகள் நடைபெறும்.

- Advertisement -

அதே சமயம் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் ஜே அணியுடன் 2 போட்டிகளில் மோத வேண்டும். அத்துடன் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் எஞ்சிய கே, எல், எம், என் ஆகிய 4 அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்த வகையில் 6 போட்டிகள் நடைபெறும் என்பதால் லீக் சுற்றின் முடிவில் ஒரு அணி வழக்கம் போல 14 போட்டிகளில் விளையாடிருக்கும்.

இதையும் படிங்க : நான் செய்த அந்த தவறை நானே சரி பண்ணிட்டேன் – ஆட்டநாயகன் இஷான் கிஷன் மகிழ்ச்சி

இந்த அணிகள் ரேண்டம் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஃபார்மட் கடந்த 2011 தொடரில் கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement