அவரு இப்படியே ஆடுனா நிச்சயம் இந்திய அணிக்கு தான் கப். அதுல சந்தேகமே இல்ல – இன்சமாம் உல் ஹக்

Inzamam
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த இந்திய அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இறுதிப் பந்தில் வெற்றியை ருசித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

VIrat Kohli IND vs PAK.jpeg

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 159 ரன்களை குவிக்க பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் விராட் கோலியின் மிகச் சிறப்பான ஆட்டம் காரணமாக பிரமாதமான வெற்றியை பெற்றிருந்தது.

இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்த விராட் கோலி 82 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்த போட்டி முடிந்ததும் விராட் கோலியை உலகமே கொண்டாடி வரும் வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக்கும் வெகுவாக பாராட்டி பேசி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

VIrat Kohli IND vs PAK

விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தால் எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான அவரது இந்த ஆட்டத்தை என்னால் விவரிக்க முடியவில்லை. மேலும் அதை பாராட்டுவதற்கு வார்த்தைகளை தேடுவதும் கடினம் தான். அந்த அளவிற்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

ஆபத்தான பல பேட்ஸ்மேன்கள் கிரிக்கெட்டில் இருக்கின்றனர். ஆனால் விராட் கோலி அவர்கள் அனைவரையும் விடவும் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வெற்றி பெறும் என்றால் அது விராட் கோலியின் பங்களிப்பில் தான் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இதையும் படிங்க : பிரீஹிட்டில் போல்டான பந்துக்கு 3 ரன்கள் வழங்கியது ஏன்? தவறு யாருடையது – ஐ.சி.சி கூறும் விதிமுறை என்ன?

சமீப காலமாகவே கோலி தனது மிகச் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்பியுள்ளார். அவர் இப்படியே விளையாடினால் நிச்சயம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பும் உள்ளது என இன்சமாம் உல் ஹக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement