பிரீஹிட்டில் போல்டான பந்துக்கு 3 ரன்கள் வழங்கியது ஏன்? தவறு யாருடையது – ஐ.சி.சி கூறும் விதிமுறை என்ன?

Kohli IND vs PAK
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான பரபரப்பான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நிர்ணயப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 159 ரன்கள் அடித்தால் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி இந்திய அணி விளையாட துவங்கியது. அதன்படி விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே 31 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்ததால் நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெறுவது கடினம் தான் என்ற அச்சம் ஏற்பட்டது.

VIrat Kohli IND vs PAK.jpeg

- Advertisement -

ஆனாலும் களத்தில் இருந்த விராட் கோலி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரது ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியின் இறுதிவரை கொண்டு சென்றது. ஒரு கட்டத்தில் கடைசி ஓவரின் முதல் பந்தில் பாண்டியா ஆட்டம் இழந்து வெளியேறியதும் நிச்சயம் இந்திய அணி தோல்வி அடையும் என்று தான் பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் அந்த நேரத்தில் தான் போட்டியின் இருபதாவது ஓவரை வீசிய பாகிஸ்தான் வீரர் முகமது நவாஸ் விராட் கோலிக்கு எதிராக ஒரு நோபால் வீசினார்.

அந்த பந்தில் விராட் கோலி சிக்ஸ் அடிக்கவே போட்டி இன்னும் பரபரப்பாக சென்று கடைசியில் இறுதிப் பந்தில் இந்திய அணி வெற்றியும் பெற்றது. இந்நிலையில் விராட் கோலி எதிர்கொண்ட அந்த கடைசி ஓவர் நோபால் பிரச்சனை தான் தற்போது சமூகவலைதளத்தில் பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. ஏனெனில் முதலில் அந்த பந்து நோபால் கொடுக்கப்பட்டதற்கே பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் இருந்த அம்பயருடன் சண்டையிட்டனர்.

Babar

அதன் பின்னர் ஃப்ரீ ஹிட் பந்தில் விராட் கோலி கிளீன் போல்ட் ஆகிய பிறகும் பந்து ஸ்டம்பில் பட்டு பவுண்டரியினை நோக்கி செல்லவே அதற்குள் இந்திய அணி வீரர்கள் 3 ரன்கள் ஓடி விட்டனர். அந்தப் பந்திற்கு டெட்பால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் மூன்று ரன்கள் வழங்கியது ஏன் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அம்பயரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

இந்நிலையில் அப்படி போல்ட் ஆகியும் 3 ரன்கள் வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து நான்கு விதிமுறைகளை ஐசிசி விலக்கியுள்ளது. அதன்படி ஃப்ரீ ஹிட் பந்தில் பேட்ஸ்மேன் ரன் அவுட் ஆனாலோ அல்லது பந்தினை தடுத்தாலோ அல்லது பீல்டர்களை தடுத்தாலோ அல்லது பந்தை இருமுறை அடித்தாலோ மட்டும்தான் பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்படுவார்.

இதையும் படிங்க : நானும் எவ்வளவோ சிக்ஸர் அடிச்சுருக்கேன் ஆனால் – விராட் கோலியை நேரடியாக வியந்து பாராட்டி பாண்டியா பேசியது என்ன

அதனை தவிர்த்து வேறு எந்த விதத்தில் ஆட்டம் இழந்தாலும் அவருக்கு விக்கெட் கொடுக்கப்பட மாட்டாது. மேலும் பிரீ ஹிட் பந்தில் கேட்ச் ஆவதற்குள் பேட்ஸ்மேன்கள் ரன்கள் ஓடினால் அது கணக்கில் கொள்ளப்படும். அந்த வகையில் பந்து ஸ்டம்ப் அடித்து வெளியே சென்றதால் அதற்குள் வீரர்கள் ரன் ஓடி முடிக்கும் பட்சத்தில் அது பைஸ்ஸாக கணக்கிடப்படும் என்று ஐசிசி தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளது.

Advertisement