விராட் கோலி பண்ண தப்புக்கு அவங்க குடும்பம் என்ன பாவம் பண்ணாங்க ? – கோலிக்காக சப்போர்டுக்கு நின்ற இன்சமாம்

Inzamam
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றும் என்று பலரும் கூறி வந்த நிலையில் தங்களது முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அதன் பின்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு படு மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணியின் மீதும், கேப்டன் விராட் கோலி மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

sodhi

- Advertisement -

அதுமட்டுமின்றி ஒரு சிலர் விராட் கோலியின் மகள் மற்றும் மனைவி என ஒட்டுமொத்த குடும்பத்தையும் மிரட்டி பேசி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறுகையில் : விராட் கோலியின் மகள் மற்றும் மனைவி ஆகியோரின் மீது மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகளின் மூலம் அறிந்தேன். கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் அனைவரும் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடுகிறோமே தவிர மற்றபடி நாங்கள் அனைவரும் கிரிக்கெட் வீரர்கள் தான். கோலியின் பேட்டிங் மற்றும் அவரது கேப்டன்சி ஆகியவற்றின் மீது விமர்சனம் செய்யலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் அவரது குடும்பத்தை தாக்கி பேசுவதும், மிரட்டுவதும் தவறான விஷயம், இது கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

Williamson

சில நாட்களுக்கு முன்பு இதே போன்று வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சமூக வலைதளங்களில் தாக்கப்பட்டதை நான் கண்டேன். வெற்றி தோல்வி என்பது விளையாட்டில் சகஜம். அதை தவிர்த்து தனிப்பட்ட முறையில் வீரர்களை பாதிக்கும் படி பேசுவது தவறான விஷயம். கோலியின் குடும்பத்தை அவதூறாகப் பேசியது என்னை மிகவும் பாதித்துள்ளது. பாகிஸ்தான் அணியுடனான தோல்விக்கு பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியாவின் அடுத்த கேப்டன் ரோஹித் இல்லை. கோலியின் சிஷ்யன் தான் அடுத்த கேப்டனாம் – வெளியான அறிவிப்பு

ஆனால் இந்திய அணி இப்படி விளையாடும் என்று நான் நினைக்கவே இல்லை. ஒட்டுமொத்த இந்திய அணியும் தற்போது கடும் அழுத்தத்தை சந்தித்துள்ளதாக நினைக்கிறேன். இப்படி ஒரு இந்திய அணியை நான் பார்த்ததே இல்லை எனவும் இன்சமாம் உல் ஹக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement