இந்தியாவின் அடுத்த கேப்டன் ரோஹித் இல்லை. கோலியின் சிஷ்யன் தான் அடுத்த கேப்டனாம் – வெளியான அறிவிப்பு

ind

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் கேப்டனாக செயல்பட்டு வருபவர் விராட் கோலி. அண்மையில் விராட் கோலி வெளியிட்டுள்ள வெளியிட்டிருந்த அறிவிப்பில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் தான் டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவியை துறக்க உள்ளதாக அறிவித்தார். மேலும் பணிச்சுமை காரணமாக இந்த பதவியிலிருந்து விலக இருப்பதாகவும் இருப்பினும் அணியில் ஒரு பேட்ஸ்மேனாக நீடிப்பேன் என்று கோலி அறிவித்திருந்தார். இதன் காரணமாக இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் ? என்ற கேள்வி பெருமளவு எழுந்தது.

Williamson

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. அதனை தொடர்ந்து இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெளியேறும் பட்சத்தில் கோலியும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்த உலக கோப்பை தொடரை தொடர்ந்து அடுத்து இந்தியாவில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் நடைபெற உள்ளது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த டி20 தொடருக்கான தொடரிலிருந்து இந்திய அணியின் புதிய கேப்டன் செயல்படுவார் என்று தெரிகிறது.

Rahul-1

அந்த வகையில் நியூசிலாந்து டி20 தொடருக்கான புதிய கேப்டனை இன்னும் சில வாரங்களில் பிசிசிஐ அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த தொடருக்கு நிச்சயம் ரோகித் சர்மா கேப்டன் பதவியை ஏற்கமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் அணியின் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : டியர் வியூவர்ஸ். கம்ப்ளீட்லி யெஸ். ஐ டோட்டலி அக்ரீ வித் யூ – பும்ரா சொன்னது உண்மைதான் ஸ்ரீகாந்த் ஆதரவு

ஏனெனில் ரோகித் சர்மா, கோலி, பும்ரா போன்ற முன்னணி வீரர்களுக்கு அந்த தொடரில் ஓய்வு வழங்கப்பட இருப்பதாகவும் அதன் காரணமாக இளம் வீரர்களைக் கொண்ட அணி அந்த தொடரில் விளையாட இருக்கிறது. எனவே அந்த அணிக்கு கேஎல் ராகுல் தலைமை தாங்குவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement