டியர் வியூவர்ஸ். கம்ப்ளீட்லி யெஸ். ஐ டோட்டலி அக்ரீ வித் யூ – பும்ரா சொன்னது உண்மைதான் ஸ்ரீகாந்த் ஆதரவு

Srikanth
- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் மீண்டும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணிக்கு கிட்டத்தட்ட அடுத்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

Williamson

- Advertisement -

இந்த மோசமான தோல்வியின் மூலம் இந்திய அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின்பு தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறுகையில் :

குடும்பத்தை பிரிந்து ஆறு மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறோம். பயோ பபுளில் தொடர்ந்து இருப்பதனால் மனச்சோர்வு ஏற்படுகிறது. இதன் காரணமாக எங்களுக்கு ஓய்வு தேவை. நன்றாக விளையாட வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் களத்தில் இறங்கும் போது அதை சிந்திக்க முடியாது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும் போது மன ரீதியான அழுத்தம் ஏற்படுகிறது.

Bumrah-1

இதன் காரணமாக சில நேரம் சிக்கலில் சிக்கி விடுகிறோம் என்றும் தனக்கு ஓய்வு தேவை என்றும் பும்ரா கூறியிருந்தார். இந்நிலையில் பும்ராவின் இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் குறிப்பிடுகையில் : நான் வீரர்களை முழுமையாக ஆதரிக்கிறேன். மனச்சோர்வு என்பது ஒரு முக்கியமான விஷயம் பிசிசிஐ இப்போதே இந்திய வீரர்கள் ஆடும் போட்டிகளின் கால அட்டவணைகளை சரியாக திட்டமிடுவது பற்றி யோசிக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : எந்தவொரு டீமும் பண்ணாத தப்பை இந்திய அணி செய்துள்ளது. அதுவே தோல்விக்கு காரணம் – ஹர்பஜன் கண்டனம்

அது மட்டுமின்றி வீரர்களுக்கு சரியான ஓய்வு தர வேண்டியதும் அவசியம். எல்லா வீரர்களையும் கவனித்துக் கொள்வது குறித்து பிசிசிஐ இன்னும் நன்றாக யோசிக்க வேண்டும். இதுதான் அவர்களை நாம் கவனித்துக்கொள்ள வேண்டிய நேரம். இப்போது அவர்களை சரியாக கவனித்து ஓய்வு வழங்கினால் தான் அவர்களால் திறம்பட செயல்பட முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement