எந்தவொரு டீமும் பண்ணாத தப்பை இந்திய அணி செய்துள்ளது. அதுவே தோல்விக்கு காரணம் – ஹர்பஜன் கண்டனம்

Harbhajan

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வியை சந்தித்த இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி 110 ரன்கள் மட்டுமே குவித்ததால் நியூசிலாந்து அணி எளிதாக இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Williamson

இதன் மூலம் இந்திய அணி மீண்டும் ஒருமுறை படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணியின் இந்த தோல்வியின் காரணமாக அரையிறுதி வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி பெற்ற இந்த தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்னாள் வீரர்கள் மத்தியில் எழுந்துள்ளன. அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பதை தெளிவாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மொத்தமாக 54 பந்துகளை அதாவது 9 ஓவர்களை ரன்கள் எதுவும் அடிக்காமல் வீணடித்தது. எனக்கு தெரிந்து டி20 போட்டிகளில் எந்த ஒரு அணியும் இத்தனை பந்துகளை வீணடித்து இருக்காது.

sodhi

ஒவ்வொரு பந்தில் ஒரு ரன் அடித்திருந்தால் கூட நம்மால் பெரிய ரன் குவிப்பை வழங்கி இருக்க முடியும். போட்டியின் முடிவுகள் மாறி இருக்கும். இத்தனை டாட் பால்கள் விளையாடியது தான் இந்திய அணியின் தோல்வியை தீர்மானித்ததாக நினைப்பதாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஆனால் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் திறம்பட செயல்பட்டார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா இப்படி படுமோசமாக தோற்க இதுவே காரணம் – மவுனம் களைத்த சச்சின் டெண்டுல்கர் (உண்மை தான்)

பொதுவாக இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்தை சிறப்பாக எதிர்கொள்வார்கள். ஆனால் இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் பந்து வீசும் போது ஒரு ரன் தட்டிவிட்டு ஓடவே சிரமப்பட்டார்கள். இதுபோன்ற அழுத்தங்கள் தான் கோலி போன்ற அருமையான வீரர்களை கூட தவறான ஷாட் அடித்து அவுட் ஆக தூண்டியது. எல்லாம் அழுத்தத்தால் ஏற்பட்ட தவறு தான் என ஹர்பஜன் சிங் தெளிவாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement