இந்தியா இப்படி படுமோசமாக தோற்க இதுவே காரணம் – மவுனம் களைத்த சச்சின் டெண்டுல்கர் (உண்மை தான்)

Sachin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது தங்களது முதலாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் படு மோசமான தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட்டுகள் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் அரை இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு மங்கி உள்ளது என்றே கூறலாம்.

sodhi

அது மட்டுமின்றி இந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் பல்வேறு சொதப்பல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்திய அணியின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த தோல்வி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை கூறி வர இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்த தோல்வி குறித்து அவர் கூறுகையில் : நம் இந்திய அணிக்கு இது ஒரு கடினமான நாளாக அமைந்துவிட்டது. இது மாதிரியான நாட்களை நாம் சந்தித்தது உண்டு. இதன் காரணமாக நாம் இந்த நாளை மறந்து தான் ஆக வேண்டும். நாம் என்னதான் முயன்றாலும் எதற்குமே சில நாட்களில் பலன் கிடைக்காது.

Williamson

அது மாதிரியான ஒரு நாள் தான் இந்தியாவிற்கு இன்று அமைந்துவிட்டது. இதை தவிர பேசுவதற்கே வேறொன்றுமில்லை. வரும் நாட்களில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என சச்சின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நியூசிலாந்து அணி பவுலிங்கில் செலுத்திய உத்தியோகத்தை இந்திய அணி செலுத்த தவறி விட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : கோலியிடமிருந்து இப்படி ஒரு வாரத்தை வரும்னு நான் எதிர்பார்க்கல – கபில் தேவ் அதிருப்தி

அதே நேரத்தில் வில்லியம்சன் பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி பந்துவீச செய்தார். குறிப்பாக 6 முதல் 10 ஓவர்களில் இந்திய அணி வெறும் 13 ரன்கள் மட்டுமே குவித்தது. அதுவே இந்திய அணியின் தோல்வியின் காரணமாக அமைந்தது என்று நான் பார்க்கிறேன் என சச்சின் டெண்டுல்கர் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement