INDvsWI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடர் – ரசிகர்களுக்கான நற்செய்தியை அறிவித்த நிர்வாகம்

INDvsWI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற உள்ளது. இந்த சுற்றுப் பயணத்தின் முதல் தொடராக பிப்ரவரி 6ஆம் தேதி ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அதனை தொடர்ந்து பிப்ரவரி 16 ஆம் தேதி அன்று டி20 தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் ரோஹித் முழுநேர கேப்டனாக செயல்பட இருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

INDvsWI

- Advertisement -

ஒருநாள் போட்டிகள் அனைத்தும் அகமதாபாத் மைதானத்திலும், டி20 போட்டிகள் அனைத்தும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது. அதன்படி தற்போது இந்த டி20 தொடர் நடைபெற இருக்கும் கொல்கத்தா மைதானத்தில் 75 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்குண்டான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்தே கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது நற்செய்தியாக மாறி உள்ளது. ஏனெனில் கடந்த ஓராண்டுக்கு மேலாகவே குறைந்த அளவிலான ரசிகர்கள் மட்டுமே போட்டியை நேரில் கண்டுகளித்த வேளையில் தற்போது ஈடன் கார்டன் மைதானத்தில் 75% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய இடங்கள் மைதானத்தில் 75% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றால் குறைந்தது 50 ஆயிரம் ரசிகர்களாவது வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : கேப்டன் இல்லாமல் தடுமாறும் 4 ஐபிஎல் அணிகளுக்கு கேப்டனாக தகுதியுடைய 4 வீரர்கள் இதோ

இதன் காரணமாக கடந்த சில தொடர்களாகவே குறைந்த அளவிலான பார்வையாளர்களை கொண்டு நடைபெற்று வந்த கிரிக்கெட் போட்டிகளானது தற்போது அரங்கம் நிறைய சுவாரஸ்யமாக நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement