கேப்டன் இல்லாமல் தடுமாறும் 4 ஐபிஎல் அணிகளுக்கு கேப்டனாக தகுதியுடைய 4 வீரர்கள் இதோ

Captains
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு மாநகரில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சிறிய அளவில் அல்லாத மெகா ஏலம் 2 நாட்கள் நடைபெற உள்ளதால் இந்த ஏலத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டிபோட்டு வாங்க காத்திருக்கின்றன.

ipl

- Advertisement -

இந்த மெகா ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 1214 வீரர்கள் போட்டி போட உள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது. முன்னதாக இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை தேர்வு செய்து அவர்களின் பெயர் மற்றும் சம்பளம் உள்ளிட்ட விவரங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளன.

கேப்டன்கள் இல்லாமல் 4 அணிகள்:
அதில் மும்பை, டெல்லி உள்ளிட்ட சில அணிகள் தங்களது கேப்டனை இப்போதே தேர்வு செய்து அறிவித்துள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எம்எஸ் தோனி, டெல்லி கேப்பிடல் அணிக்கு ரிஷப் பண்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்கு கேஎல் ராகுல், அஹமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்டியா ஆகியோர் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

David warner

இருப்பினும் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போன்ற அணிகள் இன்னும் கேப்டன்கள் இல்லாமல் தவிக்கிறது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வரலாற்று கேப்டன் எம்எஸ் தோனி விரைவில் ஓய்வுபெற உள்ளதால் அந்த அணிக்கான வருங்கால கேப்டனும் யார் என தெரியாமல் உள்ளது. எனவே விரைவில் நடைபெற உள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்த அணிகளின் கேப்டனாக செயல்பட தகுதியான வீரர்கள் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. டேவிட் வார்னர் :
சன் ரைசெர்ஸ் ஹைதெராபாத் அணி தோற்றுவிக்கப்பட்டது முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் அந்த அணிக்கு கடந்த 2016ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். பேட்டிங்கில் மலை போல ரன்களை குவித்த அவர் 3 முறை ஆரஞ்சு தொப்பிகளை வென்று ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஆரஞ்சு தொப்பிகளை வென்ற வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

David warner SRH
David warner SRH

இன்ஸ்டாகிராமில் புட்ட பொம்ம பாடலுக்கு ஆட்டம் போட்டு ஹைதராபாத் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த டேவிட் வார்னர் அந்த அணியின் நிர்வாகத்தில் இருப்பவர்களின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை. ஆம் 2021 சீசனில் முதல் முறையாக பேட்டிங்கில் சொதப்பியதன் காரணமாக முதலில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கி பின்னர் 11 பேர் கொண்ட அணியில் இருந்து அவர் கழட்டிவிடப்பட்டார்.

- Advertisement -

அதனால் மனமுடைந்த அவர் அந்த அணியில் இருந்து விலகியதுடன் சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்று தன்னை நிரூபித்துக் காட்டினார். எனவே வரும் ஐபிஎல் ஏலத்தில் இவரை எவ்வளவு கோடிகள் கொடுத்து வேண்டுமானாலும் விலைக்கு வாங்கி கேப்டன் பதவியை எந்தவித தயக்கமும் இல்லாமல் கொடுக்கலாம்.

shreyas

2. ஷ்ரேயாஸ் ஐயர் :
2019ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்ட இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் அந்த சீசனில் நீண்ட நாட்கள் கழித்து அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்து சென்றார். அடுத்த சீசனிலும் தமது அபார கேப்டன்ஷிப் வாயிலாக ஒருபடி மேலே சென்று வரலாற்றிலேயே முதல் முறையாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். ஆனால் 2021 சீசன் துவங்குவதற்கு முன்னதாக அவர் காயம் அடைந்ததால் அவருக்கு பதில் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

பின்னர் துபாயில் நடந்த ஐபிஎல் தொடரின் 2வது பகுதியில் காயத்திலிருந்து குணமடைந்தது அணிக்கு திரும்பிய போதிலும் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படவில்லை. அத்துடன் ஐபிஎல் 2022 தொடரிலும் அவரை டெல்லி நிர்வாகம் தக்க வைக்கவில்லை. எனவே இளம் வீரராக இருப்பதுடன் கேப்டன்ஷிப் அனுபவமும் உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் விரைவில் நடைபெற உள்ள ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு ஏதோ ஒரு அணியின் கேப்டனாக செயல்பட போகிறார் என கண்டிப்பாக நம்பலாம். குறிப்பாக பஞ்சாப், கொல்கத்தா, பெங்களூரு ஆகிய அணிகள் இவரை கேப்டனாக நியமிக்க முயற்சித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.

Holder 1

3. ஜேசன் ஹோல்டர் :
வெஸ்ட்இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்காகவும், கரிபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் ஒரு சில அணிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு பல வெற்றிகளை கண்டவர். கடந்த சீசனில் இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்தார்.

இருப்பினும் அந்த அணி நிர்வாகம் இவரை தக்க வைக்காமல் விடுவித்துள்ள இந்த நேரத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5வது டி20 போட்டியில் ஹாட்ரிக் உட்பட 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்து தனது அணியை அபார வெற்றி பெறச் செய்தார். வெற்றியாளரை தீர்மானிக்கும் அந்த போட்டியின் கடைசி ஓவரில் 4 விக்கெட்கள் உட்பட மொத்தம் 5 விக்கெட்டுகள் சாய்த்த அவர் ஆட்ட நாயகன் விருது பெற்று பல ஐபிஎல் அணிகளின் பார்வையை தனது பக்கம் திரும்பியுள்ளார். ஏற்கனவே கேப்டன்ஷிப் அனுபவம் இருப்பதுடன் தற்போது நல்ல பார்மில் இருப்பதால் இவரை மெகா ஏலத்தில் எடுத்து கேப்டன் பொறுப்பை வழங்கினால் அது நிச்சயம் தவறான முடிவாக இருக்காது.

Ishan

4. இஷான் கிசான் :
ஓப்பனிங் இடத்தில் அதிரடியாகவும் தேவைப்பட்டால் மிடில் ஆர்டரில் களமிறங்கி தேவையான ரன்களை குவிக்க திறமை கொண்ட இளம் வீரர் இஷான் கிசன் கடந்த சீசன்களில் மும்பை அணிக்காக அபாரமாக விளையாடினார். இருப்பினும் அவரை அந்த அணி நிர்வாகம் தக்கவைக்காமல் விடுவித்தது பல ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வெறும் 23 வயதுடன் அதிரடியான விக்கெட் கீப்பர் பேட்டராக இருக்கும் இவர் நட்சத்திர கேப்டன் எம்எஸ் தோனி பிறந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு ஏற்கனவே கேப்டன்ஷிப் செய்துள்ள இஷான் கிசான் அந்த தொடரில் இந்தியாவை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். எனவே இளம் வீரராக இருக்கும் இவரை மெகா ஏலத்தில் எடுத்து கேப்டன் பொறுப்பை வழங்கினால் அது வருங்காலத்தில் மிகப் பெரிய நன்மையை செய்யலாம்.

Advertisement